40. போகிப் பண்டிகை

நமக்கு தேவை இல்லாதவற்றையும் பயன் படாதவைகளையும் போகியின் போது வீட்டில் இருந்து அப்புற படுத்துவது வழக்கம்.
'சாமி' திரைப் படத்தில் விவேக் நகைச்சுவைக்காக செய்த காட்சியை நடைமுறையில் செய்து போகி கொண்டாடி இருக்கிறார் ஒருவர் இன்றய தினமலர் செய்தியில்.


செத்துப்போனது மனித நேயம் :குப்பை தொட்டியில் முதியவர் வீச்சு




சிவகாசி: உழைக்கத் திராணியற்ற முதியவரை குப்பைத் தொட்டியில் வீசி மனித நேயத்தை வளர்க்கும் செயல் சிவகாசியில் நடந்துள்ளது. "பாசமுள்ள' மகனை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி மருதநாடார் ஊரணி பகுதியில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். பழைய துணியால் சுற்றப்பட்ட பொருட்கள் மூட்டைகளாக கிடந்தன. அவற்றை துப்புரவு பணியாளர்கள் அகற்ற முயன்ற போது சந்தேகம் அடைந்தனர். மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 60 வயதுள்ள முதியவர் சுயநினைவின்றி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள், முதியவரை மரத்தடிக்கு துõக்கி வந்தனர். தண்ணீர், டீ கொடுத்து ஆசுவாசப்படுத்தி நினைவு தெளிய வைத்தனர். அவர் மிகவும் சோர்ந்து கிடந்தார். அவரிடம் இருந்து தகவல் பெற முடியாததால், முதியவரை பற்றி தெருத்தெருவாக விசாரித்தனர். அப்போது சில தகவல்கள் கிடைத்தன. முதியவர் பெயர் பாண்டி. சிவகாசி பி.கே.எஸ். ஆறுமுகநாடார் தெருவை சேர்ந்தவர். அச்சுத் தொழிலாளியாக பணியாற்றியவர். மனைவி மல்லிகா பல ஆண்டுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். அச்சகத்தில் வேலை செய்த மகன் செல்வகுமார் பராமரிப்பில் இருந்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டவரை கவனிப்பாரில்லை. பசியால் அவதிப்பட்டார். குறைந்த வருவாயில் குடும்பம் நடத்திய மகனால் தந்தையை பராமரிக்க இயலவில்லை. எனவே தந்தையைக் கண்டு கொள்ளவில்லை. கிடைத்ததை சாப்பிட்டு தெருவோரத்தில் நாட்களை கடத்தி வந்தார் பாண்டி.ஒரு வீட்டு வாசலில் படுத்துக் கிடந்தவரை வீட்டு உரிமையாளர், இறந்தால் தொந்தரவு என கருதி குப்பை தொட்டியில் வீசியிருக்கலாம் என தெரியவந்தது.இந்த தகவல் அறிந்து, சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், பணியாளர் உதவியுடன் முதியவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மகனை அழைத்து வந்து முதியவரை பராமரிக்க முயற்சி செய்தனர். மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. பெற்றோரை பராமரிக்க தவறும் மகன்களுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றியும் இதுபோன்ற மனிதநேயமற்ற சம்பவங்கள் தொடர்வது வேதனையான விஷயம்தான்.

நன்றி தினமலர்

Related Posts with Thumbnails