48. கண்ணை நம்பாதே!



"கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய்" அப்படீன்னு நம்ப ஆளுங்க அந்த காலத்திலேயே சொல்லி வச்சிருக்கங்க. எப்பொழுதும் நம்ப கண்கள் "உள்ளது உள்ள படி" காமிச்சாலும் சமயத்துல கால வாரி விட்டுடும்.

வில்லன் கத்தியால் குத்திவிட்டு ஓடிப்போய் விட, காப்பாற்றுவதற்காக கதாநாயகன் கத்தியை உறுவும் போது போலீஸ் வந்து அவனை குற்றவாளி ஆக்குவதை எத்தனை தமிழ் சினிமாவில பார்த்திருக்கோம்.

அதே சூழ்நிலையில் அமைந்த இந்த காணொளியை முதலில் பார்த்து விட்டு வாருங்கள்.



இந்த Movieல், முதல் Frame பார்க்காததால் ஏற்பட்ட விளைவு இது. அதற்கு எப்படி கண்களை குறை கூற முடியும் என்கிறீர்களா?

சரி, கீழே படத்தில் கோபமாக இருக்கிறவர் எந்த பக்கம் இருக்கிறார்? இடது பக்கம்தானே? நீங்கள் நினைத்தது சரிதான்.




அப்படியே எழுந்து நான்கு ஐந்து அடி பின்னே சென்று மீண்டும் அந்த படத்தைப் பாருங்கள். கோபக்காரர் இடம் மாறி வலது பக்கம் வந்திருப்பார். அருகே சென்றால் பழய இடத்திற்கு அவரும் வந்திருப்பார்.

அட போங்கப்பா, எழுந்து போயில்லாம் எவன் பார்ப்பது! அதுவும் வேலை நேரத்திலன்னு அலுத்துக் கொள்பவர்கள் கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



இதில் ஆண் எந்த பக்கம் இருக்கிறார்?
வலது பக்கம் இருப்பது ஆண் என்றும் இடது பக்கம் இருப்பது பெண் என்றும் சுலபமாக கண்டு பிடித்து இருப்பீர்கள்.

இங்கேதான் போட்டோ ஷாப் செய்த மயாஜாலம் உங்கள் கண்களை ஏமாற்றுகிறது.

இரண்டும் ஒரே உருவம்தான். வலது பக்கம் இருப்பது சற்று contrast கூடுதலாக இருப்பதால் ஆண் என்றும்,
இடது பக்கத்தில் இருக்கும் படத்தில் contrast குறைவாக இருப்பதால் பெண் என்றும் கண் சொல்கிறது.

இதனைத்தான் Optical Illusion என்கிறார்கள். இது போன்ற பல படங்கள் நீங்கள் முன்பே பார்த்திருக்கலாம்.

அடுத்த படத்தில் உள்ளது போல Backround ஐ வைத்து கண்களை ஏமாற்றும் படங்கள் நிறைய உள்ளன.


பெஞ்சின் நீளமும் மேஜையின் அகலமும் சமமாக இருக்கிறது என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள். அளந்து பார்த்துக் கொள்ளுங்கள்

அதுபோல் அசையா உருவத்தை அசைவது போல் உணரும் கீழே உள்ள படம் போலவும் பார்த்திருக்கலாம்.



பல படத்தை முன்பு பார்த்திருந்தாலும் ஆரம்பத்தில் உள்ள இரண்டு படங்களும் Illusion வகையில் சிறந்ததாக
கருதப்படுகிறது.

Google ஆண்டவரிடம் கேட்டால் இது போன்ற படங்களை வலைவீசி அள்ளிக் கொண்டு வந்து கொட்டுவார். பார்த்து ரசிக்கலாம்.

ஆனால் ஒன்று Side bar ல் இருக்கும் வந்தோர்களின் எண்ணிக்கை 10,000 த்தை தாண்டி கண்பிப்பதை கண்டு உங்கள் கண்கள் ஏமாற்றுகிறதோ என்று நினைக்க வேண்டாம். அனத்தும் மூன்றாண்டுகளுக்கு மேலாக உலக அன்பர்கள் பதித்த கால் கண் தடங்கள்.

வந்தவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும், படித்து ரசித்தவர்களுக்கும், கருத்து தந்தவர்களுக்கும் நன்றி! நன்றி!!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails