51.வாழ்த்துக்களைப் பெற வருக !!




90 களின் ஆரம்பத்தில் புத்தாண்டு , பொங்கல், தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கனும்னா, அவர்கள் வீட்டிற்கு நடந்தோ, வண்டியிலோ நேரில் சென்று வாழ்த்திவிட்டு, விருந்து சாப்பிட்டுவிட்டு வந்து கொண்டிருந்தோம்.


அப்றமா பல கடைகள்ல தேடி அலைஞ்சி, விதவிதமா வாழ்த்து அட்டகளை வாங்கி போஸ்ட் மேன் மூலமா வாழ்த்துக்களை அனுப்பத்தொடங்கினோம்.

வாழ்த்து அட்டைகள் வாங்க வெளியே போகக்கூட நேரமில்லாம போனதால அடுத்து வந்த வருஷங்கள்ல் போன்ல கூப்புட்டு வாழ்த்துக்களை "வாய்ஸ்சா" அனுப்பி வச்சோம்.

நம்ம வாழ்க்கையில கம்ப்யூட்டர் நுழைந்தப்புறம் இ மெயில்ல தட்டிவிட்டு High Techகா வாழ்த்திகிட்டு இருந்தோம்.

அட அதுக்கும் நேரமில்லாம போயிடுச்சேன்னு, கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு வரை செல் பேசியில "குறுங் செய்தியா" வாழ்த்தை சுறுக்கி அனுப்பிகிட்டு இருந்தோம்.

இப்போ போஃன் பேசவே நேரமில்ல SMS அனுப்ப யாருக்கு முடியும்.




அதுனால வாழ்த்துக்களை Face Book லயும் Blogல யும் போட்டுருக்கோம்,

தெரிங்சவங்க,நண்பர்கள் எல்லாம் வாங்க!

வருசையாய் வந்து,

வாழ்த்த வாங்கிகிட்டுப் போங்க.

கீழே வாழ்த்து டவுன்லோடு ஆகும் வரை காத்திருந்து "OPEN"ல் கிளிக் செய்யவும்








அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்


சரி புத்தாண்டு அதுவுமா வந்தவங்கள சும்மா அனுப்ப முடியுமா?

யாரையும் பல்லிளிக்க விடாம இனாம் காலண்டர் தர்ரேன்.

இங்க இருந்து டவுன்லோடு பண்ணிக்குங்க.

காலண்டர்2011

இது இந்த வருஷத்துக்கு மட்டுமில்ல

வருஷத்தை மாற்றி எல்லா வருஷத்துக்கும் உபயோகப்படுத்தலாம்

உங்களுக்கு பிடிச்ச படத்த போட்டு பிரிண்டு எடுத்துங்க.

50. சிரிப்பு



சிரிப்பு பற்றியும் அதனால் ஏற்படும் மருத்துவ பயன்கள் பற்றியும் தினம் டி.வி காமடி ஷோவில் பல குறிப்புகளை கேட்டிருப்போம். அதே சிரிப்பு ஒரு தொற்று நோயும் கூட. நாம் சிரிப்பதற்கு ஜோக்குகளை படிக்கவோ காமடி சீன்களை பார்க்கவோ கூட வேண்டாம். மற்றவர்கள் சிரிப்பதை பார்த்தாலே அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

வகுப்பறையில் வாத்தியார் அடித்த ஜோக்குக்கு சிரித்ததை விட, ஜோக்கு அடித்து விட்டு அதற்கு அவரே குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது, அவரது தொப்பை ஆடுவதைக் கண்டு சிரித்ததே அதிகம்.

1.சிரிப்பு: ஒலி

இதோ கலைவாணர் N.S.K இந்தப் பாட்டில் சிரிப்பின் வகைகளைப் பற்றிச் சொல்லி அவரே சிரித்துக் காட்டும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. இந்த நகைச்சுவைப் புதையலை, PLAY பட்டனை அழுத்தி, கேட்டு சிரியுங்கள்.


2. சிரிப்பு: ஒலியும் ஒளியும்

புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு என்று சில கிராமங்களில் சொல்ல கேட்டிருக்கலாம். ஆனால் திருமணத்தன்றே இந்த மணப்பெண், மணமகன் மாற்றிச் சொல்லிய ஒரு வார்த்தையைக் கேட்டு எப்படி அடக்க முடியாமல் வெடிச் சிரிப்பை உதிர்க்கிறார் என்று பாருங்கள். அந்த சிரிப்பு கண்டிப்பாக நம்மையும் ஒட்டிக் கொள்ளும்..

Related Posts with Thumbnails