41. எகிப்து

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வலை மனையை வெள்ளையடித்து புதுப்பிக்க நேரம் கிடைத்துள்ளது. இந்த பத்து மாத இடைப்பட்ட நேரத்தில், பலர் "எண்ணச்சுவடி"யை புரட்டிப் பார்த்திருப்பது 'FEEDJET' மூலம் தெரிய வந்திருக்கிறது. அதில் அதிகமானோர் "ஜோதிடம்" என்ற தேடுதல் மூலம் google லால் இழுத்து வரப் பட்டிருக்கிறார்கள். வந்து சென்ற அனைவருக்கும் நன்றி.

நைஜீரியாவில் ஏற்பட்ட சில அசாதாரண சூழலால் இடம் பெயர வேண்டிய நேர்ந்ததால் (நேரம் கிடைத்தாலும் சோம்பேரித்தனம் குறிக்கீட்டால்) வலையை தொடர முடியாத நிலை. மீண்டும் பணி "எகிப்த்தில்" தொடர்வதால், சுவடியை தூசி தட்ட ஆரம்பித்தாகி விட்டது.


"எகிப்த்தில்" பணி என்றதும், புறப்படும் முன்பு பலரும் பலவித எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள்.

"Egypt ல் பிரமிட் பார்க்கப் போனா, அங்கேயிருந்து கிரிஸ்டல்ல பிரமிட் ஒன்னு வாங்கிகிட்டு வாங்கப்பா" என்று மகனின் கோரிக்கை

“'சூயஸ்' கால்வாயில் boating எல்லாம் இருக்காமே, வோவீங்களா?" என்று மனைவின் ஆதங்கம்.

"Cairo வில் famous பெல்லி டான்ஸ்தான், அத பாக்காம வந்திடாதே" என்று நண்பனின் advise.

இங்கு ஏற்பட்ட அனுபங்கள் என்று எழுதி போரடிக்காமல் சும்மா "படம்" காட்டலாமே.

முதலில் என்ன படம் காட்டலாம்? நண்பரின் ஆசையை நிறைவேற்றவும், கிளுகிளுப்பாக ஆரம்பிக்கவும் பெல்லி டான்ஸிலிருந்து தொடங்குவோம்.

சிம்ரனின் Hip dance பார்த்திருக்கிறோம். இந்தப் பெண்மணியின் Hip plus belly dance பார்த்து Enjoy நண்பர்களே!

(குறிப்பு:- இது வலைதளங்களில் இருந்து தேடி கண்டுபிடித்து இறக்குமதி செய்தது என்பதினை அறியவும்.)



40. போகிப் பண்டிகை

நமக்கு தேவை இல்லாதவற்றையும் பயன் படாதவைகளையும் போகியின் போது வீட்டில் இருந்து அப்புற படுத்துவது வழக்கம்.
'சாமி' திரைப் படத்தில் விவேக் நகைச்சுவைக்காக செய்த காட்சியை நடைமுறையில் செய்து போகி கொண்டாடி இருக்கிறார் ஒருவர் இன்றய தினமலர் செய்தியில்.


செத்துப்போனது மனித நேயம் :குப்பை தொட்டியில் முதியவர் வீச்சு




சிவகாசி: உழைக்கத் திராணியற்ற முதியவரை குப்பைத் தொட்டியில் வீசி மனித நேயத்தை வளர்க்கும் செயல் சிவகாசியில் நடந்துள்ளது. "பாசமுள்ள' மகனை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி மருதநாடார் ஊரணி பகுதியில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். பழைய துணியால் சுற்றப்பட்ட பொருட்கள் மூட்டைகளாக கிடந்தன. அவற்றை துப்புரவு பணியாளர்கள் அகற்ற முயன்ற போது சந்தேகம் அடைந்தனர். மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 60 வயதுள்ள முதியவர் சுயநினைவின்றி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள், முதியவரை மரத்தடிக்கு துõக்கி வந்தனர். தண்ணீர், டீ கொடுத்து ஆசுவாசப்படுத்தி நினைவு தெளிய வைத்தனர். அவர் மிகவும் சோர்ந்து கிடந்தார். அவரிடம் இருந்து தகவல் பெற முடியாததால், முதியவரை பற்றி தெருத்தெருவாக விசாரித்தனர். அப்போது சில தகவல்கள் கிடைத்தன. முதியவர் பெயர் பாண்டி. சிவகாசி பி.கே.எஸ். ஆறுமுகநாடார் தெருவை சேர்ந்தவர். அச்சுத் தொழிலாளியாக பணியாற்றியவர். மனைவி மல்லிகா பல ஆண்டுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். அச்சகத்தில் வேலை செய்த மகன் செல்வகுமார் பராமரிப்பில் இருந்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டவரை கவனிப்பாரில்லை. பசியால் அவதிப்பட்டார். குறைந்த வருவாயில் குடும்பம் நடத்திய மகனால் தந்தையை பராமரிக்க இயலவில்லை. எனவே தந்தையைக் கண்டு கொள்ளவில்லை. கிடைத்ததை சாப்பிட்டு தெருவோரத்தில் நாட்களை கடத்தி வந்தார் பாண்டி.ஒரு வீட்டு வாசலில் படுத்துக் கிடந்தவரை வீட்டு உரிமையாளர், இறந்தால் தொந்தரவு என கருதி குப்பை தொட்டியில் வீசியிருக்கலாம் என தெரியவந்தது.இந்த தகவல் அறிந்து, சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், பணியாளர் உதவியுடன் முதியவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மகனை அழைத்து வந்து முதியவரை பராமரிக்க முயற்சி செய்தனர். மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. பெற்றோரை பராமரிக்க தவறும் மகன்களுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றியும் இதுபோன்ற மனிதநேயமற்ற சம்பவங்கள் தொடர்வது வேதனையான விஷயம்தான்.

நன்றி தினமலர்

39. புத்தாண்டு வாழ்த்துக்கள்

Photobucket

Photobucket

Photobucket

Photobucket



அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

38.தீபாவளி வாழ்த்து

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்


Photo Sharing and Video Hosting at Photobucket



Photo Sharing and Video Hosting at Photobucket

37. மீண்டும் ஒரு புத்திசாலி திருட்டு


புத்திசாலி திருட்டை பத்திய செய்தி படித்து இரண்டு நாள் கூட ஆகல இதோ மீண்டும் ஒன்று. ரூம் போட்டு யோசிப்பாங்களோ???

சேலத்தில் எலக்ட்ரிகல் சாதனங்கள் விற்பனை டீலராக இருப்பவர் ஆறுமுகம். சில மாதத்துக்கு முன் வாடிக்கையாளராக அறிமுகமானார் ஒரு "டிப்டாப்' ஆசாமி. 35 வயதுள்ள அவர் தன்னை வினோத்குமார் என்றும், பெரிய பிசினஸ் மேன் எனவும் கூறினார். அதற்கேற்ப விலையுயர்ந்த கேமரா மொபைல் போன் மற்றும் வாட்ச், பிரேஸ்லெட் அணிந்திருந்தார்.ஒரு நாள் ஆறுமுகத்திடம் சற்றே பதட்டத்துடன் வந்த வினோத்குமார், "சார்... என்னோட ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருந்த பர்ஸ் தொலைந்து விட்டது. அதற்காக விண்ணப்பித்துள்ளேன். எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனது நண்பர்கள் மதுரையில் இருந்து பணம் கொடுக்கவும் தயாராக உள்ளனர். நீங்கள் சம்மதித்தால், உங்களது வங்கிக் கணக்கில் அவர்கள் பணத்தை கட்டிவிடுவர். அந்த பணத்தை எடுத்து என்னிடம் கொடுக்க முடியுமா?' என மிகுந்த பணிவோடு கேட்டார்.

ஆறுமுகமும் தனது வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்தார்.

ஒரே வாரத்தில் மூன்று முறை தலா ரூ.80 ஆயிரம் வீதம் மதுரையில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் பணம் கட்டப்பட்டது. அவற்றை அவ்வப்போது வந்து வினோத் வாங்கிச் சென்றார்.

மீண்டும் ஆறுமுகத்திடம் வந்த வினோத், "சார்... எனது மனைவி சிங்கப்பூரில் இருந்து திரும்பி வருகிறார். உங்களுக்கு ஏதேனும் தேவையாக இருந்தால் அவற்றை வாங்கி வரச்சொல்கிறேன்' என்றார்.அதை நம்பிய ஆறுமுகமும், சிங்கப்பூரில் நகைகள் விலை குறைவாக இருக்கும் எனக்கருதி, ரூ. 50 ஆயிரத்துக்கு நகைகள் வாங்கிவர சொன்னார்.

அதற்கான பணத்தை வினோத்குமாரின் மனைவியின் வங்கி கணக்கு எண் என கொடுக்கப்பட்ட எண்ணில் செலுத்தினார். அதன்பின் வினோத் கடை பக்கமே வருவதில்லை. அவரது மொபைல் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

இத்துடன் மதுரையில் இருந்து ஆறுமுகத்தை தேடி போலீசார் வந்தனர். மதுரையில் வேலையில்லாத இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் கட்ட கூறியதாகவும், அதன்படி மூன்று இளைஞர்கள் தலா ரூ.80 ஆயிரத்தை சேலத்தில் உள்ள ஆறுமுகத்தின் வங்கிக் கணக்கில் கட்டியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் தானும் ஏமாற்றப்பட்ட கதையை போலீசாரிடம் விளக்கினார்.

வினோத்தின் மனைவியின் வங்கிக்கணக்கை ஆராய்ந்தபோது, திருப்பூரில் இதே பாணியில் வேறொருவர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த மோசடியில் தமிழகம் முழுவதும் பலரும் ஈடுபட்டிருப்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி: தினமலர் 22/10/07

Related Posts with Thumbnails