சனி, மார்ச் 14, 2009

44.குறட்டை

பொதுவாக ஒரு வியாதி வந்து விட்டது என்றால், அந்த நோயாளிதான் அதன் கஷ்டங்களை அனுபவிப்பார். ஆனால் இந்த குறட்டை நோய் மட்டும் உரிமையாளரை விட்டு விட்டு மற்றவர்களை பாடாய் படுத்திவிடும்.

குறட்டை விடுபவர் ஆனந்தமாக நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருப்பவரோ கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.

நோயாளிக்கு இங்கு சிகிச்சை தேவையில்லை, கூட இருப்பவர்கள்தான் காதில் பஞ்சு வைத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகூட இந்த இக்கட்டிலிருந்து விதிவிலக்கல்ல.

இந்த வீடியோவில் குழந்தை படும் பாட்டினை நீங்களும் கண்டு களியுங்கள்.


வழக்கம் போல முழுவதும் Download ஆகும் வரை Pause செய்து, முழுமையா பாருங்க

4 கருத்துரைகள்:

Anonymous said...

Search UUUP in google - this is the treatment ppl are suggesting-vaduvurkumar

Anonymous said...

pass இல்லை ... pause

மோகன் காந்தி said...

குறட்டை பற்றிய விளக்கம் அருமை

Anonymous said...

குறட்டையை கட்டுப்படுத்த வருகிறது புதிய கருவி
ஜனவரி 05,2010,00:00 IST
லண்டன் : குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம். குறட்டை அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடி இருக்கும். உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்லவேண்டி வரும். இந்த நிலையை போக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது.
லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது, இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. அப்போது, இதயத்திலிருந்து வெளியேறும் காற்று எந்த தடையும் இன்றி வெளியேறுகிறது. இதனால், குறட்டை நின்றுபோகும். இதில், பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் மூலம், நாம் படுக்கைக்கு செல்லும் போது ஆன் செய்தும், எழுந்திருக்கும் போது ஆப் செய்தும் வைத்துக் கொள்ளலாம். இந்த சாதனம் தற்போது பரிசோதனையில் இருந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், தூக்கம் கெட்டு தவிக்கும் லட்சோப லட்ச மக்கள் பயன் பெறுவர்
நன்றி தினமலர் - ஜனவரி 05,2010

Related Posts with Thumbnails