சனி, டிசம்பர் 31, 2011

60.சிரித்து வாழ வேண்டும்,



2011 க்கு விடை கொடுத்து விட்டு 2012ல் காலடி எடுத்து வைக்கிறோம். பழமையை திரும்பிப் பார்த்தால், மகிழ்ச்சி, சோகம், வெற்றி, தோல்வி, வரவு, செலவு என்று பல கலந்த கலவையை சந்தித்து இருப்பது தெரிய வரும்.

 அவை கொடுத்த பாடத்தைக் கொண்டு எதிர் வரும் இந்த ஆண்டை மேலும் சிறப்பான பலன்களைப் பெற முயற்சிப்போம்.

வாய் விட்டு சிரித்து இப்புத்தாண்டை ஆரம்பிபோமே.

இணயத்தில் நான் ரசித்த சில "கணவன் மனைவி" ஜோக்குகளை இங்கே தொகுத்துள்ளேன்.

மணமானவர்கள் என்றால் ஏதேனும் ஒரு ஜோக்குக்காவது சிரித்து இருக்க வேண்டும்.



1." உங்க சம்சாரம் உங்களை பளார்னு கன்னத்துல அறையறா..பார்த்துட்டுசும்மா இருக்கீங்களே..?

"சும்மா இல்லாம..? எதுக்கு அடிச்சே?ன்னு எதிர்த்துப்பேசி இன்னொரு கன்னத்துலயும் அடி வாங்க     சொல்றீங்களா?"

******

2. மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
 கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான் அவன்!!


******

3. மனைவி: என்னங்கஅதோ குடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே போறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு!


கணவன்: அவன் கொடுத்து வச்சவன்அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னுதான் ஆச்சர்யமா இருக்கு!








4.மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டாஎன்ன பண்ணுவீங்க?


கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.


மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?


கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.


*******

5. (புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்)
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…?


வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??


********


6. சினிமா தியேட்டரில் மனைவி : ஏங்க, பின்னாடி ஒருத்தான் காலை விட்டு சுரண்டிக்கிட்டே இருக்கான்.
                                                                    
கணவன் : பின்னாடி திருப்பி உன்னோட மூஞ்சை காட்டு...! சனியன் சாவட்டும்.                 




7. "கல்யாணத்துக்குப் பிறகு என்னோட தோஷம்  விலகிப்போயிடும்னு ஜோசியர் சொன்னது பலிச்சிடுச்சி."
"அப்படியா?! என்ன தோஷம்?" 
"சந்தோஷம்"
*********

8. னைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்எனக்கு மாசம்  எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
ணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே…!


*******


9. கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சேவேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்ககூடாது
கடவுள்: சரி சரிஅமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?!!


*******

சரி அப்படியும் சிரிப்பு வரலியா? மனைவியை விரட்ட இவர் செய்யும் ஐடியாவையாவது வீடியோவில் பார்த்து சிரிக்க முயற்சி செய்யுங்கள்.




அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்





புதன், நவம்பர் 30, 2011

59."அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட"


இனிமேல் பேப்பர் வாங்க கடைக்குப் போகவோ அல்லது ஓசியில் படிக்க, டீக் கடைக்கோ போக வேண்டி இருக்காது.

எல்லாம் டிஜிட்டல் மயம்.

அதிலேயும் டெஸ்க் டாப், லேப் டாப் எல்லாம் போய் ஐப் பேடும் , டேப்லட்டும் சர்வ சாதாரணமாய் எல்லார் கைகளிலும் இடம் பிடித்து விட்டது.


இனி காகிதத்தை மடக்கி, திருப்பி, மடித்து, காற்றில் பறக்க விடாமல் பிடித்து படிக்க செய்தியை படிக்க வேண்டி இருக்காது.





சும்மா ஸ்டெயிலா விரல்களினாலேயே விரித்து, சுருக்கி, தொட்டு அழுத்திப் படிக்கலாம்.




என்னதான் I-Padம் Tabletம், News Paper இடத்த பிடிச்சாலும் " "அதுக்கு இதல்லாம் சரிப்பட்டு வராது"

அதை தயாரிச்சவங்களே "அதுக்கு இதல்லாம் சரிப்பட்டு வராது"ன்னு சொல்லிட்டாங்களே. அப்பறமும் ஏன் யோசிக்கிறங்க.

வடிவேலுதான் 'எதுக்கு சரிபட்டு வரமாட்டோம்னு" தெரியமலே ஊரை விட்டுப் போனாரு.

I-Pad எதுக்கு சரிப்பட்டு வராதுன்னு தயாரிப்பளர்கள் சொன்னத வீடியோவை கிளிக் செய்து, நீங்களாவது தெரிஞ்சிகிட்டுப் போங்க.


வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

58.நாட்டுப் பாடல்.



"நாட்டுப் பாடல்" என்ற உடன் "நாட்டுப்புறப் பாடல்" என்று நினைத்து, ஒரு புஷ்ப்பவனம் குப்புசாமின் பாடலையோ, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடலையோ, atleast தஞ்சை செல்வியின் பாடலையோ எதிர்பார்த்து வந்திருந்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள்".

இது மழலையர் பாடல்(Nursery Rhymes).நாடுகளை வரிசைப் படுத்திப் பாடும் பாடல்

அழகாக அனைத்து நாட்டுப் பெயர்களையும் இணைத்து ராகத்தோடு பாடியும், வரைபடத்தில் அந்த நாட்டை காட்டியும், சித்தரித்து இருக்கும் "நாட்டுப் பாடல்" ("Country Rhymes"!!). சிறுவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

Buffering முடிந்து முழுமையாக பார்த்தால் நன்றாக ரசிக்கலாம்.




USA வரை படத்தில், மாநிலத்தின் பெயரைக் கேட்ட உடன் சுட்டிக் காட்டும் இந்த "சுட்டி" யின் திறமையும், ஒவ்வொரு முறையும் சுட்டிக் காட்டிவிட்டு ஆடும் ஆட்டமும் கண்டிப்பாக நம்மை வியக்க வைக்கும்.

Country Rymesஐ கேட்டதோடு இந்த சுட்டியின் ஆட்டதையும், ஞாபகசக்தியையும் கண்டு ரசிப்போம்.



ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

57. ஆகஸ்ட் 15



ஆகஸ்ட்-- 15

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket


கீழே உள்ள "Flash" Load ஆகும் வரை காத்திருக்கவும்.


நன்றி: "web-India123.com" Greetings



Photobucketஅனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.Photobucket



செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

56. ஆடி 18

ஆடி பதினெட்டு




வந்தாரை வாழவைப்பது மட்டும் தமிழரது பண்பாடு அல்ல, வாழ வைத்தாரை வணங்கி நன்றி செலுத்துவதும் கூட நமது மரபு, அது மனிதர்கள் ஆனாலும் சரி, மரங்களானாலும் சரி.

தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத்திற்கு மூல காரணமாகி, விவசாயியையும், நம்மையும் வாழ வைக்கும் கதிரவனுக்கு, தை முதல் தேதியில் வணங்கி நன்றியை தெரிவிக்கிறோம்.ஏர் உழுவது முதல் ஏற்றி வருவது வரை உதவிடும் மாட்டுக்கு, தை இரண்டாம் நாளில் பொங்கல் வைத்து சீராட்டுகிறோம்

பயிர்த்தொழிலுக்கு ஆதாரமான நீருக்கும் அதனை வாரிவழங்கும் நதிக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவே ஆடி பதினெட்டாம் பெருக்கு.


water


"சோறுடைத்த" நாட்டை வளமாகி வரும் காவேரிக் கரை ஓர மக்களின் முக்கிய விழாவாக ஆடிப்பெருக்கு காணப்படுகிறது. காவேரி ஓடாத ஊர்களில் கூட, அங்கே உள்ள ஆறுகளிலும் குளங்களிலும், முக்கியமாக பெண்களால் இவ்விழா கொண்டாடப்படுகிறது.



தமிழ் புதினத்தின் சிகரமான "பொன்னியின் செல்வன்" ஆரம்பிப்பது கூட இதேபோன்ற ஒரு ஆடிப்பெருக்கு விழா அன்றுதான். வீர நாராயணன் ஏரிக்கரை ஓரம் ஆடிப்பெருக்கு விழாவை ரசித்த வண்ணம் வருவதாக வந்தியதேவனை அறிமுகப் படுத்தியிருப்பார் அமரர் கல்கி.



ஒவ்வொரு ஆடிப்பெருக்கு அன்றும், ஓடிவரும் காவிரியும்,இழுத்து சென்ற சப்பரமும்(சிறு தேர்), காவிரிக்கரையில் கையில் கட்டிய மஞ்சள் கயிரும், காதோலை(பனை ஓலை) கருகமணியும், புளி சாதத்தில் தொடங்கி, தேங்காய் சாதம், எள் சாதம் என தயிர் சாதத்தில் முடியும் சித்ரான்னங்களும் நினைவுக்கு வராமல் இருக்காது.



அதே நினைவில் ஜானகியின் குயிலோசையுடன் "ஆடி பதினெட்டாம் பெருக்கினைக்" கொண்டாட கீழே உள்ள Play பட்டனை அழுத்துங்கள்.







சனி, ஜூலை 23, 2011

55. பூனைக்கு மணி கட்டுவது யார்?

பூனையின் திருவிளயாடல்( புத்திசாலிப் பூனை)




"எப்போதும் படம், வீடியோ, பயணம் அப்படின்னு பெரியவங்க ரசிக்கிற மாதிரியே Blog ல பதிவு போட்டுகிட்டு இருக்கிறியே, நாங்களும் கோடைக்கு விடுமுறை 2 மாசம், சமச்சீர் கல்வியா சாதா கல்வியான்னு தெரியாததல புத்தகமில்லம ஒரு மாசமாவும் போர் அடிச்சு கிடக்கிறோமே, நாங்க பொழுது போக்கிற மாதிரி விளையாட்டு எதையாவது பதிவிடக் கூடாதான்னு" கேட்கும் மாணவர்களுக்கான விளையாட்டு பதிவிது.

பூனைக்கு மணி கட்டுவது யார்ன்னு யோசிப்பது இருக்கட்டும் முதலில் பூனையை கட்டத்துக்குள் கட்டுங்கள் பார்ப்போம்.

அது அவ்வளவு லேசுபட்ட வேலையில்ல.இது மிகவும் புத்திசாலிப் பூனை. தந்திரமாக தப்பித்துவிடும். ஆனா முயற்சி செய்தா பூனைய தீகார் ஜெயில்ல புடிச்சி போட்டிடலாம்.

எங்க! கீழே உள்ள கட்டத்த அடைச்சி பூனைய கட்டுங்க பார்க்கலாம்.

உங்களுக்காக கொஞ்ச கட்டத்த அவங்கலே அடைச்சி தர்ராங்க.






வெள்ளி, ஜூலை 15, 2011

54. மழலை மொழி






உலகில் ஆயிரம் மொழிகள் இருந்தாலும் மிக இனிமையான மொழி எது தெரியுமா? சந்தேகமில்லாமல் மழலை மொழிதான்.

அதுமட்டுமல்ல, Encript செய்யப்பட்ட மொழி. அதனை பேசும் குழந்தைக்கும் பெற்றவர்களுக்கு மட்டுமே புரிந்து கொள்ள கூடிய அளவிற்கு கோடிங் செய்யப்பட்டது.

இதோ இங்கே இரண்டு மழலைகள் பேசிக்கொள்ளும் அழகினைப்பாருங்கள்.

நமக்கு "தத்தத" மட்டும்தான் கேட்கிறது. அதனை புரிந்து கொண்டு மற்றய குழந்தை பதில் சொல்வதை கேட்டு ரசியுங்கள்.




வெள்ளி, ஏப்ரல் 15, 2011

53.நான் அடித்தால் வலிக்கும்.



அகப்பையால் அடித்தால் வலிக்குமா? அதுவும் மரத்தாலான அகப்பை.

"நீ என்னை எத்தனை அடி வேண்டுமானாலும் அடித்துப் பார், எனக்கு வலிக்காது. ஆனால் நான் ஒரு அடி அடித்தாலும் உனக்கு வலிக்கும்." என்று சவவால் விடுகிறார் இவர். சாட்சிக்கு அவரது நண்பர் உண்டு.

எப்படி என்று கேட்கிறீர்களா? Videoவைப் பாருங்கள் புரியும்.

100% சிரிப்பிற்கு நான் உத்திரவாதம்.

வழக்கம் போல முழுவதும் Download ஆகும் வரை Pause செய்து, முழுமையா பாருங்க,

வீடியோ பார்த்த பிறகு "ஆட்டோவை ஸ்டார்ட் செய்தாயிற்று, கியரையும் போட்டாயிற்று, ஆனாலும் ஆட்டோ நகர மாட்டேன் என்கிறது" என்று அஜித்திடம் கருணாஸ் புலம்புவது ஞாபகத்துக்கு வரும்


சனி, ஜனவரி 08, 2011

52.பெயரைச் சொன்னால் போதும்



படைப்பாளிகளுக்கு கலா ரசனை கூடும் போது, அதனைப் பார்போரை வியக்க வைக்கிறது. அது அந்தக் கால சிற்பியாக இருந்தாலும் சரி இந்தக் கால சாஃப்ட் வேர் இஞ்சினியர் ஆனாலும் சரி.

FLASH உருவாக்குபவரின் ரசனையை "மெல்ல மெல்லத் தொடலாமா" என்ற பதிவுல உள்ள FLASHல காணலாம்.

இப்போ இங்க அவர்களின் குறும்புத்தனத்தை இந்த FLASHல பார்த்து ரசியுங்கள்.

வழக்கம் போல FLASH முழுவதும் லோடு ஆகும் வரை காத்திருக்கவும். லோடிங் % Status bar ரசித்த பின்பு உங்க பேரை இதில் Type செய்து Enter தட்டி விட்டு காத்திருங்கள்,.

கண்டிப்பாக உங்கள் முகத்தில் புன்னகைத் தோன்றும்.





இந்த idea பெற ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

Related Posts with Thumbnails