53.நான் அடித்தால் வலிக்கும்.

அகப்பையால் அடித்தால் வலிக்குமா? அதுவும் மரத்தாலான அகப்பை.
"நீ என்னை எத்தனை அடி வேண்டுமானாலும் அடித்துப் பார், எனக்கு வலிக்காது. ஆனால் நான் ஒரு அடி அடித்தாலும் உனக்கு வலிக்கும்." என்று சவவால் விடுகிறார் இவர். சாட்சிக்கு அவரது நண்பர் உண்டு.
எப்படி என்று கேட்கிறீர்களா? Videoவைப் பாருங்கள் புரியும்.
100% சிரிப்பிற்கு நான் உத்திரவாதம்.
வழக்கம் போல முழுவதும் Download ஆகும் வரை Pause செய்து, முழுமையா பாருங்க,
வீடியோ பார்த்த பிறகு "ஆட்டோவை ஸ்டார்ட் செய்தாயிற்று, கியரையும் போட்டாயிற்று, ஆனாலும் ஆட்டோ நகர மாட்டேன் என்கிறது" என்று அஜித்திடம் கருணாஸ் புலம்புவது ஞாபகத்துக்கு வரும்
ஆக்கம்:
மதி
- காலம்:
2
கருத்துரைகள்
52.பெயரைச் சொன்னால் போதும்

படைப்பாளிகளுக்கு கலா ரசனை கூடும் போது, அதனைப் பார்போரை வியக்க வைக்கிறது. அது அந்தக் கால சிற்பியாக இருந்தாலும் சரி இந்தக் கால சாஃப்ட் வேர் இஞ்சினியர் ஆனாலும் சரி.
FLASH உருவாக்குபவரின் ரசனையை "மெல்ல மெல்லத் தொடலாமா" என்ற பதிவுல உள்ள FLASHல காணலாம்.
இப்போ இங்க அவர்களின் குறும்புத்தனத்தை இந்த FLASHல பார்த்து ரசியுங்கள்.
வழக்கம் போல FLASH முழுவதும் லோடு ஆகும் வரை காத்திருக்கவும். லோடிங் % Status bar ரசித்த பின்பு உங்க பேரை இதில் Type செய்து Enter தட்டி விட்டு காத்திருங்கள்,.
கண்டிப்பாக உங்கள் முகத்தில் புன்னகைத் தோன்றும்.
இந்த idea பெற ரூம் போட்டு யோசிப்பாங்களோ!
ஆக்கம்:
மதி
- காலம்:
0
கருத்துரைகள்
51.வாழ்த்துக்களைப் பெற வருக !!

90 களின் ஆரம்பத்தில் புத்தாண்டு , பொங்கல், தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கனும்னா, அவர்கள் வீட்டிற்கு நடந்தோ, வண்டியிலோ நேரில் சென்று வாழ்த்திவிட்டு, விருந்து சாப்பிட்டுவிட்டு வந்து கொண்டிருந்தோம்.
அப்றமா பல கடைகள்ல தேடி அலைஞ்சி, விதவிதமா வாழ்த்து அட்டகளை வாங்கி போஸ்ட் மேன் மூலமா வாழ்த்துக்களை அனுப்பத்தொடங்கினோம்.
வாழ்த்து அட்டைகள் வாங்க வெளியே போகக்கூட நேரமில்லாம போனதால அடுத்து வந்த வருஷங்கள்ல் போன்ல கூப்புட்டு வாழ்த்துக்களை "வாய்ஸ்சா" அனுப்பி வச்சோம்.நம்ம வாழ்க்கையில கம்ப்யூட்டர் நுழைந்தப்புறம் இ மெயில்ல தட்டிவிட்டு High Techகா வாழ்த்திகிட்டு இருந்தோம்.
அட அதுக்கும் நேரமில்லாம போயிடுச்சேன்னு, கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு வரை செல் பேசியில "குறுங் செய்தியா" வாழ்த்தை சுறுக்கி அனுப்பிகிட்டு இருந்தோம்.
இப்போ போஃன் பேசவே நேரமில்ல SMS அனுப்ப யாருக்கு முடியும்.

அதுனால வாழ்த்துக்களை Face Book லயும் Blogல யும் போட்டுருக்கோம்,
தெரிங்சவங்க,நண்பர்கள் எல்லாம் வாங்க!
வருசையாய் வந்து,
வாழ்த்த வாங்கிகிட்டுப் போங்க.
கீழே வாழ்த்து டவுன்லோடு ஆகும் வரை காத்திருந்து "OPEN"ல் கிளிக் செய்யவும்
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
சரி புத்தாண்டு அதுவுமா வந்தவங்கள சும்மா அனுப்ப முடியுமா?
யாரையும் பல்லிளிக்க விடாம இனாம் காலண்டர் தர்ரேன்.
இங்க இருந்து டவுன்லோடு பண்ணிக்குங்க.
காலண்டர்2011
இது இந்த வருஷத்துக்கு மட்டுமில்ல
வருஷத்தை மாற்றி எல்லா வருஷத்துக்கும் உபயோகப்படுத்தலாம்
உங்களுக்கு பிடிச்ச படத்த போட்டு பிரிண்டு எடுத்துங்க.
ஆக்கம்:
மதி
- காலம்:
0
கருத்துரைகள்
50. சிரிப்பு
வகுப்பறையில் வாத்தியார் அடித்த ஜோக்குக்கு சிரித்ததை விட, ஜோக்கு அடித்து விட்டு அதற்கு அவரே குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது, அவரது தொப்பை ஆடுவதைக் கண்டு சிரித்ததே அதிகம்.
1.சிரிப்பு: ஒலி
இதோ கலைவாணர் N.S.K இந்தப் பாட்டில் சிரிப்பின் வகைகளைப் பற்றிச் சொல்லி அவரே சிரித்துக் காட்டும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. இந்த நகைச்சுவைப் புதையலை, PLAY பட்டனை அழுத்தி, கேட்டு சிரியுங்கள்.
ஆக்கம்:
மதி
- காலம்:
2
கருத்துரைகள்


