47.சிம்ரன் Fight

பண்பாடற்ற செயல் யாருடையது?


சிம்ரன் fight என்ற தலைப்பில் Youtube ல் கண்ட வீடியோ இது. சன் டிவியின் ஒரு நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது சிம்ரனுக்கும் விஜய் ஆதிராஜ்க்கும் இடையில் நடந்த பிரச்சனையை படம் பிடித்து சன் டிவியில் சென்ற ஆண்டு ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி.


முதலில் வீடியோவை முழுமையாக பார்த்து விடுங்கள்.





சரி வீடியோவை பார்த்து விட்டீர்களா? இப்போது சொல்லுங்கள் இதில் யார் Manners இல்லாமல் நடந்து கொண்டது?

தான் நடத்தும் Programmeன் Judgeஐ மற்றவர்கள் கேட்டார்கள் என்று விமர்சனம் செய்த விஜய்யின் போக்கு பண்படான செயலா?



விஜய் சொல்லுவது போல ஏதேனும் பிரச்சனை இருந்தால் தனியாக கூப்பிட்டு சண்டை போட்டுக் கொள்ள வேண்டியது தானே. ஏன் பப்ளிக் ப்ரொகிரம் மில் வந்து பிரச்சனையை சிம்ரன் கிளப்ப வேண்டும்? சிம்ரன் செய்தது பண்படான செயலா?

சரி! பிரச்சனைதான் ஆரம்பமாகிவிட்டதே,"Will you please just unroll the camera" என்று சிம்ரன் கேட்டுக் கொண்ட போதே Camera வை நிறுத்தி இருக்க வேண்டாமா?

“கொஞ்சம் கட் பண்ணுங்க Please” என்று விஜய் இரண்டு மூன்று முறை சொன்ன பிறகாவது cut பண்ணி இருக்கலாம்,

“Personக்கு ஒரு privacy வேண்டாமா?” என்று சிம்ரன் கெஞ்சிய உடனாவது stop செய்திருக்க வேண்டும். அப்படி அல்லாது அதையும் Camarea Man recording செய்தது பண்படான செயலா?

அவர் தான் record செய்து விட்டார், பிரச்சனையை அத்தோடு விடாமல் அதை TV ல் போட்டு இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடை நாடறிய செய்த TVன் செயல் பண்பாடானதா?




அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை அதை Youtubeல் Post செய்து, TV பார்க்காதவர்களுக்கும் படம் போட்டு காட்டி இருக்கிறார்களே இது பண்படான செயலா?

அட, அதெல்லாம் போகட்டும். ஒரு வருஷத்திற்கு முன்பு நடந்த விஷயத்தை எடுத்து, குப்பையை கிளறி, வேறு வேலை(சரக்கு) இல்லாது, மீண்டும் இங்கே பதிய வைத்திருக்கிறேனே நான் செய்தது பண்படான செயலா?

இதில் யார் Manners இல்லாமல் நடந்து கொண்டதில் முந்துகிறார்கள்?

46.தீபாவளி போனஸ்

எல்லாரும் தீபாவளிக்கு, வாழ்த்து சொல்லிகிட்டு இருக்கும் போது வாய மூடிகிட்டு சும்மா இருக்க முடியுதா?

இதோ வாழ்த்து சொல்ல நானும் ரெடி.

சரி வெறும் வார்த்தையால மட்டும் சொன்னா போதுமா? படத்தோட வாழ்த்த வேண்டாமா?

வலை போட்டு வலையில தேட கூகிள் தூண்டி எடுத்துகிட்டு புறப்பட்ட போது, அஞ்சல் பெட்டியில வாழ்த்துக்கள் அதுவா வந்து குமிஞ்சுது. அதிலேந்து கொஞ்சம் அள்ளிகிட்டு வந்தாச்சி.

முதலில் ஆரவாரமான வாழ்த்து



அடுத்து அமைதியான வாழ்த்து.





பிறகு அழகான வாழ்த்து.





வாழ்த்து மட்டும் சொன்னா போதுமா? இப்போ கொஞ்சமா இனிப்பு பலகாரம்.



கடைசியா தீபாவளி போனஸ்.

எனக்கு ரொம்ப தாராள மனசு. எல்லாருக்கும் தீபாவளி இணாம் வஞ்சனை இல்லாம வாரி வழங்கி இருக்கேன் .

Photobucket




தீபாவளிய சந்தோஷமா கொண்டாடுங்க.

45. மெதுவா மெதுவா தொடலாமா!



இந்தப் பெண்ணை இறகால் வருடிப்பாருங்கள் , அவளின் சிணுங்கல்களை ரசிக்கலாம். Eve teasing இங்கே மட்டும் allowed. ஆபாசம் எதும் இல்லை. தைரியமாக சீண்டிப் பாருங்கள்.மவுஸ் இறகாக மாறியதும் கிளிக் செய்ய வேண்டும்









இந்த பிளாஷை உருவாக்கியவருக்கு எவ்வளவு ரசனை இருந்திருக்க வேண்டும் என்பதினை நினைத்து ஆச்சரியப்பட்டேன். அந்த சிணுங்கல்களும் அத்ற்குறிய Sound effectம் பிரமாதமாக அமைத்திருக்கிறார்.

அதுவும் மூக்கின் அருகே இறகை கொண்டு கிளிக்கியதும் தும்முவதும், மற்றொரு பொசிஷனில் வாயால் ஊதிவிடுவதும், சற்று நேரம் சும்மா இருந்தால் விசில் அடிப்பதும், பிறகும் கண்டு கொள்லாமல் இருந்தால் தூங்கப் போவதும் அருமை.

Girl Friend இல்லாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

44.குறட்டை

பொதுவாக ஒரு வியாதி வந்து விட்டது என்றால், அந்த நோயாளிதான் அதன் கஷ்டங்களை அனுபவிப்பார். ஆனால் இந்த குறட்டை நோய் மட்டும் உரிமையாளரை விட்டு விட்டு மற்றவர்களை பாடாய் படுத்திவிடும்.

குறட்டை விடுபவர் ஆனந்தமாக நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருப்பவரோ கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.

நோயாளிக்கு இங்கு சிகிச்சை தேவையில்லை, கூட இருப்பவர்கள்தான் காதில் பஞ்சு வைத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகூட இந்த இக்கட்டிலிருந்து விதிவிலக்கல்ல.

இந்த வீடியோவில் குழந்தை படும் பாட்டினை நீங்களும் கண்டு களியுங்கள்.


வழக்கம் போல முழுவதும் Download ஆகும் வரை Pause செய்து, முழுமையா பாருங்க

43.ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்


2009newyear1

Photobucket<

Related Posts with Thumbnails