31.துருவங்கள்.

இன்றய தினகரன் பேப்பரில் மருத்துவர்களை பற்றி வந்த இருவேறு செய்திகள்.

செய்தி 1: பேருக்கும் புகழுக்கும் ஒரு உயிரை துச்சமாக மதித்தல்.


சிறுவன் சிசேரியன் செய்ததால் மனைவியின் உடல்நிலை பாதிப்பு
கணவர் பரபரப்பு புகார்

திண்டுக்கல், ஜூன் 28:

மணப்பாறை டாக்டர் தம்பதியின் மகன் திலீபன்ராஜ், சிசேரியன் செய்ததால், மனைவிக்கு உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதாக, அவருடைய கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் பணிபுரியும் முகமது சாலிக் இதுபற்றி கூறியதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் மணப்பாறை டாக்டர் முருகேசன் மருத்துவமனையில் என் மனைவியை பிரசவத் துக்காக சேர்த்தோம். சிசேரியனில் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு நாள் மட்டுமே உயிருடன் இருந்த அந்த குழந்தை இறந்துவிட்டது. அதன்பின் என் மனைவியை வீட்டிற்கு அனுப்பினர். அங்கு என் மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனே டாக்டர் முருகேசனிடம் அழைத்துச்சென்று பரிசோதித்தேன். மாத்திரை கொடுத்து அனுப்பினர். ஆனால் தொடர்ந்து ரத்தப்போக்கு நிற்காததால், திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளேன்.
திலீபன்ராஜ்தான் என் மனைவிக்கு சிசேரியன் செய்திருப்பார் என சந்தேகிக்கிறேன். டாக்டர் வெளியிட்ட படத்தில் காணப்படும் ஆண் குழந்தை எனது குழந்தையே. என் மனைவி குணமானதும் இதுகுறித்து போலீசில் புகார் செய்ய உள்ளேன்.


செய்தி 2: ஒரு உயிருக்காக பேரையும் புகழையும் துச்சமாக மதித்தல்


கவனக்குறைவான சிகிச்சையால் பெண் மரணம்
என்னை கைது செய்யுங்கள் போலீசிடம் டாக்டர் கோரிக்கை

கொல்கத்தா, ஜூன் 28:

நோயாளி மரணத்துக்கு எனது கவனக்குறைவுதான் காரணம்; என்னை கைது செய்யுங்கள் என்று போலீசில் மன்றாடுகிறார் ஒரு டாக்டர்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது சோனாப்பூர். அங்கு டாக்டர் பி.கே. நாஸ்கர் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அதில் கருக் கலைப்பு செய்துகொள்ள பிரபாத்தி பத்ரா என்ற பெண் வந்தார். ஜூன் 18ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாஸ்கர் அவரது கருவைக் கலைக்க அறுவை சிகிச்சை செய்தார். அதைத் தொடர்ந்து அப்பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மூன்று நாடகள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அந்தப் பெண் இறந்துவிட்டார். அதுவரை எந்த நோயாளியும் அவரது மருத்துவமனையில் மரணம் அடைந்ததில்லை. எனவே டாக்டரின் மனதை இந்த மரணம் உறுத்திக் கொண்டே இருந்தது.

அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நேரத்தில் இருந்து கருக் கலைப்பு அறுவை சிகிச்சை செய்தது வரை நடந்த நிகழ்ச்சிகளை திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தார். அறுவை சிகிச்சை செய்தபோது இடுக்கி போன்ற மருத்துவக் கருவியால் அந்தப் பெண்ணின் கருப்பையில் துவாரங்கள் ஏற்பட்டு, அது சில சிக்கல்களை உருவாக்கிவிட்டது என்று டாக்டர் உணர்ந்தார். அதுவே நோயாளியின் மரணத்தில் முடிந்திருக்கிறது என்று அவர் நம்பினார். தன்னுடைய கவனக்குறைவான சிகிச்சையால் ஒரு உயிர் பலியாகிவிட்டதே என்று நினைத்து நினைத்து மனம் ஒடிந்துபோனார்.

போலீஸ் நிலையம் சென்று விஷயத்தைக் கூறி தன்னை கைது செய்து வழக்கு போடுமாறு வேண்டினார். போலீசார் திகைத்துப் போனார்கள். மருத்துவமனை தவறுகள் மறைக்கப்படுவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம், நீங்கள் மகாத்மா காந்தி மாதிரி உங்கள் தவறை வெளிப்படையாகக்கூறி தண்டனையும் கேட்கிறீர்களே.. என்று ஆச்சரியத்துடன் விசாரித்தனர். அவரை கைது செய்யவில்லை. 'நோயாளி தரப்பில் யாரும் புகார் தரவில்லை. இந்த விவரத்தை மருத்துவ வாரியத்துக்கு அனுப்புவோம். அவர்கள் தரும் அறிக்கை அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும்' என்று போலீஸ் சூப்பிரண்ட் குப்தா கூறிவிட்டார்.

'டாக்டர் நாஸ்கர் நல்லவர். அவர் மீது புகார் கொடுக்க மாட்டோம்' என்று அப்பெண்ணின் உறவினர்கள் கூறினர். போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் டாக்டர் சோகமாக இருக்கிறார். தவறு செய்தவன் தணடனை அனுபவித்தே தீர வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறார். "தற்கொலை செய்து கொள்வாரோ என்று பயமாக இருக்கிறது. போலீஸ் தலையிட்டால் நல்லது" என்று மருத்துவமனை ஊழியர்கள் கவலைப்படுகிறார்கள்.

30.பின்னல்

பெண்கள் தங்களது ஜடையை பல விதமாகப் பின்னி, ஹேர் ஸ்டைலை அடிக்கடி மாற்றிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்.

ஆண்கள் என்ன செய்வது?

அட்லீஸ்ட் ஷூ லேஸையாவது பல மாடல்களில் பின்னி அணிந்து கொள்வதற்காக பல டிசைன்கள் இதோ!
















Related Posts with Thumbnails