Showing posts with label கணணி. Show all posts
Showing posts with label கணணி. Show all posts

42. நகைச்சுவை புதையல்




இரு நாட்களுக்கு முன்பு வேலை செய்யும் இடத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் பாஸ் முடிந்து விட்டதால், அதனை புதுப்பித்து தறுமாறு சம்பந்தப் பட்ட அலுவலருக்கு மின் அஞ்சல் அனுப்பினேன்.

அதனை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்த அவர் அதனை என்னிடம் நீட்டி, "Really what you want?" என்றார்.

அதனை வாங்கிப் பார்த்தேன்.

சில நாட்களாகவே எனது மடி கணனியின் கீ போர்டில் சிறிய பிரச்சனை.
"P" எழுத்தை அடித்தால் அது தெரிவதிலை. ஒரு முறைக்கு இரு முறையாக, பலத்தை பிறயோகப் படுத்தி அடித்தால் மட்டுமே விழும்

அதனை கவனிக்க தவறியதால், அனுப்பிய மெயில் இப்படி இருந்தது.

“ My ass has exired yesterday. Kindly renew it.”

அசடு வழிவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்?

ஆனால் இந்த நிகழ்ச்சியை சொல்வதற்க்காக இல்லை இந்த பதிவு.

இதே போன்ற நிகழ்ச்சியை அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு சிந்தித்து நகைச்சுவையாக அமரர் தேவன் எழுதிய கதை- நகைச்சுவை புதையலை, சிறிது நாட்களுக்கு முன் வலையில் கண்டெடுத்தது நினைவிற்கு வந்தது.

கணனிக்குப் பதில் தட்டச்சு.


வெறும் கடித அஞ்சல் முறையில் எழுதி, என்னமாய் சிரிக்க வைக்கிறார் மனிதர். அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதியதாயிருந்தாலும், இன்றும் படித்து ரசிக்க முடிகிறது.

இதோ அந்த நகைச்சுவை புதையலை நீங்களும் படித்து ரசி(ரி)யுங்கள்!



1

10-1-'43

'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு மாணிக்கம் பிள்ளை எழுதிக் கொண்டது.

அன்பார்ந்த ஐயா,

தங்களிடம் நான் வாங்கிய தமிழ் 'டைப் ரைட்டிங்' மிஷின் வெகு அற்புதமாக உழைக்கிறது. அதைப் பார்க்கிற பேர் யாரும் அது ஸகிண்ட் ஹாண்ட் மிஷின் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நல்ல பண்டத்தைப் பொறுக்கி எடுத்து எனக்கு நீங்கள் விற்றதற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் நண்பர்களுக்கெல்லாம் தங்கள் கடையையே எப்போதும் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறேன்.

தங்கள்,
மாணிக்கம் பிள்ளை

2

14-1-'43

'புராதன விலாஸ்' மமம மானேஜர் அவர்களுக்கு:

அன்பார்ந்த ஐயா,

உங்கள் டைப் ரைட்டிங் மிஷின் இன்னும் மமமம நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் மமம என்ற எழுத்து வரும்மமம போது மமமமட்டும்மமம ஏனோ மமமமறுபடி 'ம' எழுத்து விழுந்து விடுகிறது. உடனே ஒரு ஆளை அனுப்பி ரிப்பேர் செய்யச் சொல்லவும்மமம.

தங்கள்,
மமமமாணிக்கம்மமம பிள்ளை

3

20-1-'43

புரா?ன விலாஸ்? மானே?ருக்கு?

ஐயா?

நீங்கள் அனுப்?ய ஆள் வந்தான்? ரிப்பே?ர் செய்தான்? ஆனால் நான் என்னத்தைச் சொல்?லுவேன்? தலை?லி போய் திரு?வலி வந்தது போல், ஒன்று போய் ஒ?று அல்லவா வ?து விட்டது. நான் டை? அடி?கும்போ? ஏனோ கே?விக்குறிக? விழு?து கழு?தை அறு?கி?றனவே?? த?ர, அது போடு? சத்?ம் காத?ல் கேட்?? முடியவில்லையே? உடனே வேறொரு ந?ல? ஆளாக அனுப்? வை?கவும்? பழைய ஆசா?யை மென்று கேட்?க் கொ?கிறே?

தங்கள் உண்மையுள்ள?
மா?க்கம் ?ள்ளை?


4


23-1-'43

'புராதன விலாஸ் மானேஜரே!'

அன்பார்ந்த ஐயா!

உங் கள்கம் பெனியில்வியா பாரம்வைத்து கொண்ட தற்காகஎன் னை செருப்பால்அ டிக்கலாம். ஆ மாம்! ஒருரி ப்பேர் செய்தா ல்இன்னொரு ரிப்பேர்கா த்திருக்கிறது. வார் த்தைமுடி ந்தால் இட வெளிவி ட்டுக்கொள்ளாதோ? வயி ற்றெரிச்சலைக் கேளுங்கள். தா வித்தா விக்கு திக்கிறதே!

கொஞ்சமும்மன நிம்மதியில்லை. உடனே ஒதுக்கப் பண்ண ஆள் ஜல்திஅ னுப்பவும்.

தங்கள்
மா ணிக்க ம்பி ள்ளை


5

00-00-0000

'புராதன000 மானே 0000

ஐ00

நீங்க00 அனு00ய ஆள் வந்000. அவன் சுத்0 சைபர் என்0தற்கு இது 00 அத்00ட்சி போ00தா? சும்மா0 சும்மா நா0 ரி00ர் ப0ணிக் கொ0டு இருக்க மு0யாது. இ0வே க00சி 00வை. இனியு0 மிஷி0 ஒழு0 காகா விட்டால் நான் உங்கள் கம்பெனி மீது 00000 0000 வேண்டியி0க்0ம் எ0று எ0சரிக்கை 00கிறே0.

மா0000 பி000

6


2-2-'43

'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு:

அன்பார்ந்த ஐயா,

நான் கடிதம் எழுதிய போதெல்லாம் ஆள் அனுப்பி என் மிஷினை ரிப்பேர் செய்தத்தற்கு மிக நன்றியுள்ளவனாகயிருக்கிறேன். இப்போது மிஷின் திருப்திகரமாக 'டைப்' அடிக்கிறது! அபாரம், அருமை, அற்புதம், போங்கள்!

என் நண்பர்களிடம் f f f f f f f f f f f f0 0 0 0 0 0 0 0 0 ** * * * * * 0 0 0 0 0 0 0 0 % % % % % % % f f f f f f f f f f ? / த ? f % உண்மை ???

மாணி f f ம் % ள் ?


பின் குறிப்பு

இந்த* தடி ? ம் அடிக்க ஆர பிரித்* * * * சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கி%றன ? உடனே fரு ஆளை அனுப்பி* * ? ? வைக்fவும்!

------------சுபம்--------------

19.தமிழில் டைப்செய்ய


தமிழில் டைப்செய்ய



கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதையாக IT வல்லுனர்கள் நிறைந்த வலைத்தளத்தில், இது தேவையில்லாத பதிவுதான். அதுவும் ஒரு சிறு துறும்பு கூட சொந்த சரக்கு இதில் இல்லை. சுரதா அவர்களின் சரக்கை அனுமதியுடன் வாங்கி க்ருபா உபயோகப் படுத்தி இருந்ததை வெட்டி, ஒட்டி, அட்டைப்பெட்டியில் அடைத்து எடுத்து வந்திருக்கிறேன்.


மேலே உள்ள Linkகை கிளிக் செய்யவும். Open ஆகும் பக்கத்தின் கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்து Html file ஆக Save செய்யவும்.

Notepad ஆக downloadஆனால், Menuவில் File - saveas ஐ கிளிக் செய்யவும். File name பகுதியில் .html சேர்த்து Tamil Writter.html என்று டைப் செய்யவும். Encoding பகுதியில் arrow ஐ கிளிக் செய்து UTF-8ஐ தேர்ந்தெடுத்து Desktop அல்லது My Documentல் Save செய்யவும்

அவ்வளவுதான் உங்கள் தமிழ் ரைட்டர் ரெடி.

இதன் சிறப்பு:

நீங்கள் Onlineல் இல்லாத போதும் உபயோகப் படுத்தலாம்.

இதை install செய்யத் தேவையில்லை.

இந்த fileஐ flash driveல் save செய்து எந்த கணனியிலும் உபயோகப்படுத்தாலாம்.

சிலருடைய கணனியில் security settingleல் popupblocker ஆல் தடை செய்யப்பட்டுருப்பதாக காட்டினால் information bar ஐ கிளிக் செய்து "Allow blocked content" ஐ தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இதன் பிறப்பு:

"ஈகலப்பை இல்லாத நேரங்களில் நம்ம வசந்தன் போன்றோரின் பதிவில் இருக்கும் மொழிமாற்றியைத்தான் நான் உபயோகிக்கின்றேன். நீங்களும் செய்யலாமே"என்று இலவச கொத்தனார் விக்கிபசங்க கொட்டைப் பதிவின் பின்னூட்டத்தில் கூறி இருந்ததும்,

"நம்மட வலைபக்கத்திலியும் அந்தமாரி பொட்டி ஒன்னு போடமான்னு இருக்கன். வெளியூர் போன ரொம்ப உபயோகமா இருக்குங்கோ."என்று ஓகை கேட்டிருந்ததும்,

"வசந்தன் ஐயா, உங்களுக்கு விருப்பமானால் இதை ஒரு பதிவாகப் போட்டு விக்கி பசங்க வலைப்பூவிற்கு நீங்கள் தரலாமே?" என்று வசந்தன் அவர்களை கொத்தனார் கேட்டிருந்ததும்தான் இந்த பதிவை எழுதக் காரணம்.

என் கணனியில் நான் பயன் படுத்திவந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறேன்.

நிரல் தந்தவர்க்கும்,எழுத உரம் தந்தவர்களுக்கும் நன்றி!


Key Board Layout
Photo Sharing and Video Hosting at Photobucket

Related Posts with Thumbnails