55. பூனைக்கு மணி கட்டுவது யார்?

பூனையின் திருவிளயாடல்( புத்திசாலிப் பூனை)




"எப்போதும் படம், வீடியோ, பயணம் அப்படின்னு பெரியவங்க ரசிக்கிற மாதிரியே Blog ல பதிவு போட்டுகிட்டு இருக்கிறியே, நாங்களும் கோடைக்கு விடுமுறை 2 மாசம், சமச்சீர் கல்வியா சாதா கல்வியான்னு தெரியாததல புத்தகமில்லம ஒரு மாசமாவும் போர் அடிச்சு கிடக்கிறோமே, நாங்க பொழுது போக்கிற மாதிரி விளையாட்டு எதையாவது பதிவிடக் கூடாதான்னு" கேட்கும் மாணவர்களுக்கான விளையாட்டு பதிவிது.

பூனைக்கு மணி கட்டுவது யார்ன்னு யோசிப்பது இருக்கட்டும் முதலில் பூனையை கட்டத்துக்குள் கட்டுங்கள் பார்ப்போம்.

அது அவ்வளவு லேசுபட்ட வேலையில்ல.இது மிகவும் புத்திசாலிப் பூனை. தந்திரமாக தப்பித்துவிடும். ஆனா முயற்சி செய்தா பூனைய தீகார் ஜெயில்ல புடிச்சி போட்டிடலாம்.

எங்க! கீழே உள்ள கட்டத்த அடைச்சி பூனைய கட்டுங்க பார்க்கலாம்.

உங்களுக்காக கொஞ்ச கட்டத்த அவங்கலே அடைச்சி தர்ராங்க.






54. மழலை மொழி






உலகில் ஆயிரம் மொழிகள் இருந்தாலும் மிக இனிமையான மொழி எது தெரியுமா? சந்தேகமில்லாமல் மழலை மொழிதான்.

அதுமட்டுமல்ல, Encript செய்யப்பட்ட மொழி. அதனை பேசும் குழந்தைக்கும் பெற்றவர்களுக்கு மட்டுமே புரிந்து கொள்ள கூடிய அளவிற்கு கோடிங் செய்யப்பட்டது.

இதோ இங்கே இரண்டு மழலைகள் பேசிக்கொள்ளும் அழகினைப்பாருங்கள்.

நமக்கு "தத்தத" மட்டும்தான் கேட்கிறது. அதனை புரிந்து கொண்டு மற்றய குழந்தை பதில் சொல்வதை கேட்டு ரசியுங்கள்.




Related Posts with Thumbnails