Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

12 இட்லியும் ஒரு குவாட்டரும்.

"புரிதல் திலகம் யார்?"


சில சமயங்கள்ள, "முக்கிய" செய்தியவிட,  அதுக்கு நம்ம ஆளுங்க அடிக்கிற கமெண்டு, ரொம்ப ரசிக்கும் படியா இருக்கும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சொன்ன இட்லிக் கதையைப் பத்தி,  பேப்பர்ல வந்தத எல்லாரும் படிச்சிருப்பீங்க.  அதுக்கு "மாலைமலர்"ல வந்த,  வாசகரோட எதிர் கதைய கொஞ்ச பேருதான் பார்த்திருப்பாங்க.

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ் "வலை"யகமும் என்று,  ரெண்டு கதையையும் காப்பி அண்டு பேஸ்ட்டு பண்ணியிருக்கேன்.

படிச்சு முடிச்சுட்டு, போறத்துக்கு முன்னாடி,  "புரிதல் திலகம்"  பட்டத்துக்கு தகுதியானவர், ஜெயலலிதா சொன்ன கணவனா?, நம்ம அண்ணாச்சி சொன்ன மனைவியா? அப்படின்னு தீர்ப்ப சொல்லிட்டுப் போங்க. 


செய்தி(கதை):


சென்னையில் 64ஜோடி திருமண விழாவில் முதல்மைச்சர் ஜெயலலிதா சொன்ன இட்லி கதை:




“புரிதல் என்கிற ஒரு வார்த்தையில்தான் மண வாழ்க்கையின் வெற்றி என்பது உறுதியாகிறது. அந்தப் புரிதலைத் தருவது அன்பு. உண்மையான அக்கறையில் எழுகின்ற அன்பு. இதற்கு ஒரு சிறு கதையை இங்கே நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்காக இட்லி ஊற்றுகிறாள். மொத்தமாக 12இட்லிகள்தான் அந்த மாவில் இருந்து அவளால் தயாரிக்க முடிந்தது.

சரி,கணவன் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை நாமும் சாப்பிட்டு இன்றைய பொழுதை கழித்துவிடலாம் என்று எண்ணியவாறே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கணவன் தனது பால்ய சிநேகிதன் ஒருவனை கூடவே அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான்.

அப்படி அழைத்துக் கொண்டு வந்தவன் "எனக்கும் என் நண்பனுக்கும் உணவு எடுத்து வா´என்று கூறினான். பின்னர் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள்.

அடுப்பறையில் இருப்பது 12இட்லிகள் தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும்,அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள்.

மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள். வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில்,கணவன் சொன்னான்,

"எனக்குப்போதும்.நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?’என்று .

அருகில் ரசித்து,ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது!

அந்த நேரத்தில் இவளோ ´அண்ணா உங்களுக்கு...´ என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க, ´போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...´ என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன்.

 கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்ற போது "மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு" என்று கணவன் சொல்ல,தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே,தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு. அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!

இந்தக் கதையில் நாம் பார்த்த தம்பதியினரின் புரிதலைப்போல, இன்று மணம் முடித்திருக்கும் மணமக்களாகிய நீங்களும்,ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.’’

இப்போ கமெண்டு (எதிர் கதை):




அல்லாடி கூட்டத்தில் திண்டாடி கிடைத்ததோ குவட்டர்தான், இதுவே போதாது என்ற வருத்தத்தில் வந்தவனுக்கு திடீர் நண்பன் கிடைக்க, ஒன்றும் புரியாமல் அவனையும் கூட வீட்டுக்கு அழைத்து வந்தான், 

வீட்டுக்கு வந்தவுடன், "இரண்டு கிளாச்சும் ஊறுகாயும் கொண்டு வா"  என்று மனைவியை விரட்ட,  அவளோ உள்ளிருந்து துடைப்பத்தை எடுத்து வந்து, "நேற்றுதானே இனிமேல் குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள்,  இனி குடித்தால் உங்களுக்கு துடைப்பத்தில் அடி விழும்"  என்று எச்சரிக்க, கணவன் குடிப்பதை விட்டு  எழுந்தான்,

 கணவனின் நண்பனை பார்த்து,  "அண்ணா!  நீங்கள் குடிங்கள்"  என்று சொல்ல,  அவனோ "இல்லை,  நான் குடிப்பதை விட்டு ரொம்ப நாள் ஆச்சி" என்று சொல்லி விடைபெற்றான். 

கணவனின் நண்பன் போன பிறகு மனைவி கணவனுடன் "இப்போ குவாட்டரை முழுசா குடிங்க, இதுவே உங்களுக்கு பத்தாதுன்னு எனக்கு தெரியும்"  என்று மனைவி சொல்ல, கணவன் தன்னை முழுவதுமாக புரிந்து வைத்திருக்கும் மனைவியை கண்டு வியந்தான். 

இப்போ இருக்கிற தமிழ்நாட்டின் நிலையில் இப்படி கதை சொன்னால்தான் அவங்களுக்கு புரியும்...

சரி இப்போ தீர்ப்ப சொல்லுங்க:

"புரிதல் திலகம்"  பட்டத்துக்கு தகுதியானவர், 
ஜெயலலிதா சொன்ன கணவனா?, 
நம்ம அண்ணாச்சி சொன்ன மனைவியா? 



42. நகைச்சுவை புதையல்




இரு நாட்களுக்கு முன்பு வேலை செய்யும் இடத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் பாஸ் முடிந்து விட்டதால், அதனை புதுப்பித்து தறுமாறு சம்பந்தப் பட்ட அலுவலருக்கு மின் அஞ்சல் அனுப்பினேன்.

அதனை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்த அவர் அதனை என்னிடம் நீட்டி, "Really what you want?" என்றார்.

அதனை வாங்கிப் பார்த்தேன்.

சில நாட்களாகவே எனது மடி கணனியின் கீ போர்டில் சிறிய பிரச்சனை.
"P" எழுத்தை அடித்தால் அது தெரிவதிலை. ஒரு முறைக்கு இரு முறையாக, பலத்தை பிறயோகப் படுத்தி அடித்தால் மட்டுமே விழும்

அதனை கவனிக்க தவறியதால், அனுப்பிய மெயில் இப்படி இருந்தது.

“ My ass has exired yesterday. Kindly renew it.”

அசடு வழிவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்?

ஆனால் இந்த நிகழ்ச்சியை சொல்வதற்க்காக இல்லை இந்த பதிவு.

இதே போன்ற நிகழ்ச்சியை அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு சிந்தித்து நகைச்சுவையாக அமரர் தேவன் எழுதிய கதை- நகைச்சுவை புதையலை, சிறிது நாட்களுக்கு முன் வலையில் கண்டெடுத்தது நினைவிற்கு வந்தது.

கணனிக்குப் பதில் தட்டச்சு.


வெறும் கடித அஞ்சல் முறையில் எழுதி, என்னமாய் சிரிக்க வைக்கிறார் மனிதர். அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதியதாயிருந்தாலும், இன்றும் படித்து ரசிக்க முடிகிறது.

இதோ அந்த நகைச்சுவை புதையலை நீங்களும் படித்து ரசி(ரி)யுங்கள்!



1

10-1-'43

'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு மாணிக்கம் பிள்ளை எழுதிக் கொண்டது.

அன்பார்ந்த ஐயா,

தங்களிடம் நான் வாங்கிய தமிழ் 'டைப் ரைட்டிங்' மிஷின் வெகு அற்புதமாக உழைக்கிறது. அதைப் பார்க்கிற பேர் யாரும் அது ஸகிண்ட் ஹாண்ட் மிஷின் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நல்ல பண்டத்தைப் பொறுக்கி எடுத்து எனக்கு நீங்கள் விற்றதற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் நண்பர்களுக்கெல்லாம் தங்கள் கடையையே எப்போதும் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறேன்.

தங்கள்,
மாணிக்கம் பிள்ளை

2

14-1-'43

'புராதன விலாஸ்' மமம மானேஜர் அவர்களுக்கு:

அன்பார்ந்த ஐயா,

உங்கள் டைப் ரைட்டிங் மிஷின் இன்னும் மமமம நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் மமம என்ற எழுத்து வரும்மமம போது மமமமட்டும்மமம ஏனோ மமமமறுபடி 'ம' எழுத்து விழுந்து விடுகிறது. உடனே ஒரு ஆளை அனுப்பி ரிப்பேர் செய்யச் சொல்லவும்மமம.

தங்கள்,
மமமமாணிக்கம்மமம பிள்ளை

3

20-1-'43

புரா?ன விலாஸ்? மானே?ருக்கு?

ஐயா?

நீங்கள் அனுப்?ய ஆள் வந்தான்? ரிப்பே?ர் செய்தான்? ஆனால் நான் என்னத்தைச் சொல்?லுவேன்? தலை?லி போய் திரு?வலி வந்தது போல், ஒன்று போய் ஒ?று அல்லவா வ?து விட்டது. நான் டை? அடி?கும்போ? ஏனோ கே?விக்குறிக? விழு?து கழு?தை அறு?கி?றனவே?? த?ர, அது போடு? சத்?ம் காத?ல் கேட்?? முடியவில்லையே? உடனே வேறொரு ந?ல? ஆளாக அனுப்? வை?கவும்? பழைய ஆசா?யை மென்று கேட்?க் கொ?கிறே?

தங்கள் உண்மையுள்ள?
மா?க்கம் ?ள்ளை?


4


23-1-'43

'புராதன விலாஸ் மானேஜரே!'

அன்பார்ந்த ஐயா!

உங் கள்கம் பெனியில்வியா பாரம்வைத்து கொண்ட தற்காகஎன் னை செருப்பால்அ டிக்கலாம். ஆ மாம்! ஒருரி ப்பேர் செய்தா ல்இன்னொரு ரிப்பேர்கா த்திருக்கிறது. வார் த்தைமுடி ந்தால் இட வெளிவி ட்டுக்கொள்ளாதோ? வயி ற்றெரிச்சலைக் கேளுங்கள். தா வித்தா விக்கு திக்கிறதே!

கொஞ்சமும்மன நிம்மதியில்லை. உடனே ஒதுக்கப் பண்ண ஆள் ஜல்திஅ னுப்பவும்.

தங்கள்
மா ணிக்க ம்பி ள்ளை


5

00-00-0000

'புராதன000 மானே 0000

ஐ00

நீங்க00 அனு00ய ஆள் வந்000. அவன் சுத்0 சைபர் என்0தற்கு இது 00 அத்00ட்சி போ00தா? சும்மா0 சும்மா நா0 ரி00ர் ப0ணிக் கொ0டு இருக்க மு0யாது. இ0வே க00சி 00வை. இனியு0 மிஷி0 ஒழு0 காகா விட்டால் நான் உங்கள் கம்பெனி மீது 00000 0000 வேண்டியி0க்0ம் எ0று எ0சரிக்கை 00கிறே0.

மா0000 பி000

6


2-2-'43

'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு:

அன்பார்ந்த ஐயா,

நான் கடிதம் எழுதிய போதெல்லாம் ஆள் அனுப்பி என் மிஷினை ரிப்பேர் செய்தத்தற்கு மிக நன்றியுள்ளவனாகயிருக்கிறேன். இப்போது மிஷின் திருப்திகரமாக 'டைப்' அடிக்கிறது! அபாரம், அருமை, அற்புதம், போங்கள்!

என் நண்பர்களிடம் f f f f f f f f f f f f0 0 0 0 0 0 0 0 0 ** * * * * * 0 0 0 0 0 0 0 0 % % % % % % % f f f f f f f f f f ? / த ? f % உண்மை ???

மாணி f f ம் % ள் ?


பின் குறிப்பு

இந்த* தடி ? ம் அடிக்க ஆர பிரித்* * * * சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கி%றன ? உடனே fரு ஆளை அனுப்பி* * ? ? வைக்fவும்!

------------சுபம்--------------

Related Posts with Thumbnails