62. தண்ணீர்..!. தண்ணீர்...!
குடிநீர்
கிராமங்களில் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் குடிநீரை, பக்கத்தில் உள்ள ஆற்றிலோ, குளத்திலோ அல்லது ஊர்ப் பொது கிணற்றிலோ எடுத்து வந்து உபயோகப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
(அப்பாப்பா என்ன வெயில்!) |
கோடையில் ஆறு குளங்கள் வற்றி விடுவதாலும், மழை நாட்களில் அவை மாசு படுவதோடு, தூரமாக சென்று எடுத்து வர சிரமமாக இருந்ததாலும் அவர் அவர் வீடுகளில் கிணறுத் தோண்டி அந்த நீரை குடிநீர் ஆக்கிக் கொண்டார்கள்.
(ஆத்தாடி எவ்வளவு ஆழம்!) |
கிணறுத் தோண்ட இட வசதி இல்லாதவர்கள் அடி பம்பு வைத்து நிலத்தடி நீரை எடுத்துக் கொண்டனர்.
நிலத்தடி நீர் குறைந்து பம்பில் காற்று வர ஆரம்பித்ததும் நகரங்கள் போல, பஞ்சாயத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டி, ஆழ்துளை பம்பு மூலம் நீரை ஏற்றி குழாய்த் தண்ணீரை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர்.
(குடிக்க குடிக்க தாகம் தணியலயே!) |
தற்போது ஒரு படி மேலே சென்று அனைத்து வீடுகளிலும் பாட்டில் தண்ணீர் (மினரல் வாட்டர்) வாங்கத் தொடங்கி விட்டனர்.
முன்பெல்லாம் தண்ணீர் பாட்டிலோடு யாரவது அலைந்தால், அவர்கள் அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் " IT" இன்ஜினியர் என்று தெரிந்து கொள்ளலாம். அவர்கள் இந்தியா வந்தால், பை இல்லமல் வெளியில் புறப்பட்டாலும் பறப்படுவார்களேத் தவிர, மினரல் வாட்டர் பாட்டில் இல்லாமல் படிதாண்ட மாட்டார்கள். "இன்பெக் ஷன்" ஆகிவிடுமாம்.
இன்று நிலமை மாறிவிட்டது. வயலுக்குச் செல்லும் விவசாயி முதற்கொண்டு மினரல் வாடர் பாட்டில் சகிதம்தான் புறப்படுகிறார்கள்.
ஒரு காலத்தில் ரயிலில் பயணம் செய்பவர்கள் சாப்பாடு மட்டும் தான் வீட்டிலிருந்து கட்டிச் செல்வார்கள். ரயில் எங்கெல்லாம் நிற்குமோ, அங்கு இறங்கி அந்த ஊர் தண்ணீரைப் பிடித்துக் கொள்வார்கள்.
இப்போது அப்படி இல்லை. எல்லாம் மினரல் வாட்டர் மயம்தான்.
திருமணம் போன்ற வீட்டு விழா விருந்துகளில் கூட இப்போது 1/2 லிட்டர் பாட்டிலை, ஒவ்வொரு இலைக்கும் வைத்து விடுகிறார்கள். கூஜாவில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அலையும் வேலை மிச்சம்.
அவ்வளவு ஏன்? டாஸ்மார்க்குச் செல்லும் குடிமகன்கள் கூட, மிக்ஸிங்கிற்காக வாட்டர் பாட்டிலை கையோடு கொண்டு செல்கின்றனர்.
சரி. என்ன செய்ய? ஊர் ஓடும் போது நாமும் சேர்ந்து ஓடித்தானே ஆக வேண்டும். அந்த அளவிற்குத்தான் நிலத்தடி நீரை மாசு படுத்தி விட்டோமே.
இதைக் காரணமாகக் கொண்டு, ஊருக்கு ஊர், "மினரல் வாட்டர்" என்று சாதா நீரை அடைத்து விற்க ஆரம்பித்து விட்டார்கள்.
பிராண்டட் கம்பெனியின் மினரல் வாட்டரை வாங்கி இதை தவிற்க நினைத்தாலும், அதிலும் சிறந்ததாய் பார்த்து வங்க வேண்டும்.
"மினரல்ஸ்" என்னும் போதே அதில் பல் தாது உப்புக்கள் அடங்கி இருப்பது தெரியும். ஆனால் ஒரு சில, அளவு கூடினால் அதனால் ஆபத்கும் இருக்கிறது.
சுவைக்காகவும், கடினத்தன்மையை குறைக்கவும் அதில் சேர்க்கப் படும் சில தாதுக்கள் சிறுநீரகத்தையும், இதயத்தையும் கூட பாதிப்பை உண்டாக்கும்.
அதில் சேர்க்கக் கூடிய ஒவ்வொரு தாது உப்பின் அதிக பட்ச்ச அளவை அந்தந்த நாட்டின் அரசாங்கமும், பன்னாட்டு அளவை பின்பற்றியோ சொந்தமாகவோ நிர்ணயத்துள்ளது.
அல்ஜீரியாவில் கிடைக்கும் நான்கு பெரிய கம்பெனிகளின் மினரல் வாட்டரை ஒப்பிட்டு கீழே ஒரு அட்டவணையை இணைத்துள்ளேன். அதில் தாதுக்களின் நிர்ணயக்கப் பட்ட அதிக பட்ச அளவும் (As per International Botteled Water Association IS 13428), அது கூடினால் ஏற்படும் விளைவுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது. ( Source from www.capitalhealth.ca)
படத்தை கிளிக் செய்து பெரியதாக்கிப் பார்த்துக் கொள்ளவும்.
கால்சியம் உப்பு சிறுநீரகக் கல்லையும், சோடியம் - ஹார்ட் அட்டாக்கையும் ஏற்படுத்தும் என்பது தெரியவரும்.
அந்த இரண்டின் அளவும் குறைவாக இருப்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.
லிஸ்டில், "Nestle" வை விட "Khedidija" சிறந்தது என்பது புரிய வரும்.
எனவே அடுத்தமுறை வங்கும் போது இந்த அளவுகளை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கவும்.
( ஆமாம், "மினரல் வாட்டருக்கு" சரியான தமிழ்ச் சொல் என்ன? )