18.இணைய ஜோதிடம்!
மதுமிதா இணைய வாஸ்து பற்றி ஒரு பதிவு போட்டிருந்தாங்க. அவங்களுக்கான பின்னூட்டம் எழுதப்போயி அதுவே ஒரு பதிவு அளவுக்குப் போயிட்டதால அவங்க எடத்திலப் போயி வீடுகட்டறது வாஸ்த்துப் படி சரியில்லங்கறதால நல்ல நேரம் பாத்து ஒரு பின்னூட்டப் பதிவு.
இணைய வாஸ்து மட்டுமில்லீங்க,இணைய ஜோதிடம் கூட சொல்வாங்க. நீங்க வலை ஆரம்பிச்ச நேரத்தையும் தேதியயும் கொடுத்தாப் போதும். கணணியில பாத்து எப்பலாம் அனானிகள்கிட்டருந்து பின்னூட்டம் வரும், எந்த விளம்பரத்த வலையில போட்டா வருமானம் அதிகமாகும்னு சொல்வாங்க.
அத்தோட விட மாட்டங்க இங்கே இணைய அடி(!) ஜோதிடம் பார்க்கப் படும்னு விளம்பரம் வரும். உங்க இணைய பக்கத்தோட header அளவு, sidebar அளவு, body அளவு கொடுத்தீங்கன்னா எப்ப தேன்கூடு போட்டிக்கு கதை எழுதினீங்கன்னா ஜெயிக்கலானம்னு சொல்வாங்க.
அட இன்னொன்ன விட்டுட்டோமே!,அதாங்க எண் ஜோதிடம். உங்க தலைப்ப மட்டும் "காற்ற்று வெளி"ன்னு ஒரு 'ற்' சேர்த்து கற்றுக்கும் வெளிக்கும் இடையே காற்று வெளி விட்டீங்கன்னா, சும்மா புயல் கணக்கா பின்னூட்டம் பிச்சுகிட்டு போகும்னு கூட யோசனை கொடுப்பாங்க.
ஜாக்கிரத!இத எங்க பக்கத்து ஆளுங்க பார்க்க வேண்டாம்.ஏன்னா வைத்தீஸ்வரன் கோயில்ல ஒவ்வொரு வலைப் பேருலயும் ஓலைச்சுவடி இருக்குன்னு நாடி ஜோதிடம் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.
அது சரி! மேல இருக்கிற படத்துக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு பார்க்கிறீங்களா. இந்த கிளி ஜோதிடம் இல்ல, அது மாதிரி இது இணையத்துக்கான "நாய் ஜோதிடம்" பார்க்கிற முறைங்க.