18.இணைய ஜோதிடம்!
மதுமிதா இணைய வாஸ்து பற்றி ஒரு பதிவு போட்டிருந்தாங்க. அவங்களுக்கான பின்னூட்டம் எழுதப்போயி அதுவே ஒரு பதிவு அளவுக்குப் போயிட்டதால அவங்க எடத்திலப் போயி வீடுகட்டறது வாஸ்த்துப் படி சரியில்லங்கறதால நல்ல நேரம் பாத்து ஒரு பின்னூட்டப் பதிவு.
இணைய வாஸ்து மட்டுமில்லீங்க,இணைய ஜோதிடம் கூட சொல்வாங்க. நீங்க வலை ஆரம்பிச்ச நேரத்தையும் தேதியயும் கொடுத்தாப் போதும். கணணியில பாத்து எப்பலாம் அனானிகள்கிட்டருந்து பின்னூட்டம் வரும், எந்த விளம்பரத்த வலையில போட்டா வருமானம் அதிகமாகும்னு சொல்வாங்க.
அத்தோட விட மாட்டங்க இங்கே இணைய அடி(!) ஜோதிடம் பார்க்கப் படும்னு விளம்பரம் வரும். உங்க இணைய பக்கத்தோட header அளவு, sidebar அளவு, body அளவு கொடுத்தீங்கன்னா எப்ப தேன்கூடு போட்டிக்கு கதை எழுதினீங்கன்னா ஜெயிக்கலானம்னு சொல்வாங்க.
அட இன்னொன்ன விட்டுட்டோமே!,அதாங்க எண் ஜோதிடம். உங்க தலைப்ப மட்டும் "காற்ற்று வெளி"ன்னு ஒரு 'ற்' சேர்த்து கற்றுக்கும் வெளிக்கும் இடையே காற்று வெளி விட்டீங்கன்னா, சும்மா புயல் கணக்கா பின்னூட்டம் பிச்சுகிட்டு போகும்னு கூட யோசனை கொடுப்பாங்க.
ஜாக்கிரத!இத எங்க பக்கத்து ஆளுங்க பார்க்க வேண்டாம்.ஏன்னா வைத்தீஸ்வரன் கோயில்ல ஒவ்வொரு வலைப் பேருலயும் ஓலைச்சுவடி இருக்குன்னு நாடி ஜோதிடம் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.
அது சரி! மேல இருக்கிற படத்துக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு பார்க்கிறீங்களா. இந்த கிளி ஜோதிடம் இல்ல, அது மாதிரி இது இணையத்துக்கான "நாய் ஜோதிடம்" பார்க்கிற முறைங்க.
9 கருத்துரைகள்:
மதி
இதெல்லாம் ரொம்ப ஓவரு
காற்றுவெளி தான் பிடிச்சிருக்குன்னு ஆமானுஷ்ய ஆவி சொல்லி, பயத்தை விரட்டுவதற்குள்ள பட்டபாடு.....
மதி ஜோதிடம் கூட நல்லா இருக்கும் போலிருக்கேன்னு கூட்டம் கூடாம பாத்துக்கோங்க
பிளாக்கரில் படம் போடரது
வலது பக்கம் இருக்கும் இருக்கணும்.
பேரு வைக்கும்போது ஏழு எழுத்து வரமாதிரி இருக்கணும்.
எழுதவரங்க பேருக்கு ஏத்த மாதிரி
பெண்மை கலந்து இருக்கணும்.
ஆணாயிருந்தால் கம்பீரமாக இருக்கணும்,
இதெல்லாம் எங்க இணைய
மண மர தேன் ஆனந்தா சொன்னார்.
மதுமதி அக்கா,
//மதி ஜோதிடம் கூட நல்லா இருக்கும் போலிருக்கேன்னு கூட்டம் கூடாம பாத்துக்கோங்க//
நம்ம வலைபதிவாளர்கள் எல்லாம் ரொபம்பவே உஷாராயிட்டாங்கன்னு நினைக்கிறேன். பாருங்களேன், ஜோதிடம்ன்னு சொல்லியும் யாரும் வலைப் பக்கம் வரலை.
தோ...வந்துட்டேன்.
நாக்குட்டி நல்லா இருக்கு:-))))
// துளசி கோபால் said...
தோ...வந்துட்டேன்.
***நாக்குட்டி*** நல்லா இருக்கு:-)))) //
அக்கா,
வாஸ்து பார்த்துதானே பெயர் மாற்றம் செய்துவிட்டீர்கள் ?
:-)))
வாங்க வல்லி,
"ஆனந்தா" குறி சொன்னத இலவசமா சொல்லிட்டுப் போயிருக்கீங்க.
வேற background கலர் ஏதாவது மாத்தனுமான்னு கேட்டுச் சொன்னீங்கன்னா புண்ணியமாப் போகும். தமிழ்மணத்துல நம்மப் பதிவு கொஞ்ச நேரம் கூட நிக்க மாட்டேங்குது. சர சரன்னு கீழ வந்து மறஞ்சிடுது.
வாங்க டீச்சர்,
நாய்குட்டி நல்லாயிருக்குன்னு மட்டும் சொல்லிட்டுப் போயிட்டீங்க. அது செய்ற குறும்பு பத்தி ஒண்ணும் சொல்லலியே.
அப்றம் லதா மேடம் என்னவோ சொல்றாங்களே, அந்த "நாக்குட்டி" வாஸ்து வாஸ்தவமா?
வாங்க லதா அக்கா!
நம்ப டீச்சரப் பத்தி தெரியாதா? அவங்க பேச்சு வழக்குத்தானே அப்படியே எழுத்துல கொண்டு வருவாங்க. அதோட நாய்குட்டி, பூனைகுட்டி, யானைக்குட்டி எல்லாம் அவங்களோட செல்லங்கள். அதனாலத்தான் செல்லம்மா "நாக்குட்டினு" சொல்லிட்டுப் போறாங்க.
அது சரி நீங்க வல்லி சொன்னது போல வலைய மாத்திட்டீங்கன்னா அடிக்கடி பதிவு போடலாம்ல.
வல்லிசிம்ஹன் said...
"ஆனந்தா" குறி சொன்னத இலவசமா சொல்லிட்டுப் போயிருக்கீங்க.
வேற background கலர் ஏதாவது மாத்தனுமான்னு கேட்டுச் சொன்னீங்கன்னா புண்ணியமாப் போகும். தமிழ்மணத்துல நம்மப் பதிவு கொஞ்ச நேரம் கூட நிக்க மாட்டேங்குது. சர சரன்னு கீழ வந்து மறஞ்சிடுது. //
ஒண்ணு செய்யலாம்,
நம்ம ஆனந்தா ஒரு ஒரு பதிவுக்கும் மஞ்சள் கலர் பார்டர்
பொடச் சொல்லறாரு.
அப்போ பதிவு மேலேயே இருக்குமாம்.
Post a Comment