"நாட்டுப் பாடல்" என்ற உடன் "நாட்டுப்புறப் பாடல்" என்று நினைத்து, ஒரு புஷ்ப்பவனம் குப்புசாமின் பாடலையோ, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடலையோ, atleast தஞ்சை செல்வியின் பாடலையோ எதிர்பார்த்து வந்திருந்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள்".
இது மழலையர் பாடல்(Nursery Rhymes).நாடுகளை வரிசைப் படுத்திப் பாடும் பாடல்
அழகாக அனைத்து நாட்டுப் பெயர்களையும் இணைத்து ராகத்தோடு பாடியும், வரைபடத்தில் அந்த நாட்டை காட்டியும், சித்தரித்து இருக்கும் "நாட்டுப் பாடல்" ("Country Rhymes"!!). சிறுவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
Buffering முடிந்து முழுமையாக பார்த்தால் நன்றாக ரசிக்கலாம்.
USA வரை படத்தில், மாநிலத்தின் பெயரைக் கேட்ட உடன் சுட்டிக் காட்டும் இந்த "சுட்டி" யின் திறமையும், ஒவ்வொரு முறையும் சுட்டிக் காட்டிவிட்டு ஆடும் ஆட்டமும் கண்டிப்பாக நம்மை வியக்க வைக்கும்.
Country Rymesஐ கேட்டதோடு இந்த சுட்டியின் ஆட்டதையும், ஞாபகசக்தியையும் கண்டு ரசிப்போம்.
வந்தாரை வாழவைப்பது மட்டும் தமிழரது பண்பாடு அல்ல, வாழ வைத்தாரை வணங்கி நன்றி செலுத்துவதும் கூட நமது மரபு, அது மனிதர்கள் ஆனாலும் சரி, மரங்களானாலும் சரி.
தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத்திற்கு மூல காரணமாகி, விவசாயியையும், நம்மையும் வாழ வைக்கும் கதிரவனுக்கு, தை முதல் தேதியில் வணங்கி நன்றியை தெரிவிக்கிறோம்.ஏர் உழுவது முதல் ஏற்றி வருவது வரை உதவிடும் மாட்டுக்கு, தை இரண்டாம் நாளில் பொங்கல் வைத்து சீராட்டுகிறோம்
பயிர்த்தொழிலுக்கு ஆதாரமான நீருக்கும் அதனை வாரிவழங்கும் நதிக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவே ஆடி பதினெட்டாம் பெருக்கு.
"சோறுடைத்த" நாட்டை வளமாகி வரும் காவேரிக் கரை ஓர மக்களின் முக்கிய விழாவாக ஆடிப்பெருக்கு காணப்படுகிறது. காவேரி ஓடாத ஊர்களில் கூட, அங்கே உள்ள ஆறுகளிலும் குளங்களிலும், முக்கியமாக பெண்களால் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ் புதினத்தின் சிகரமான "பொன்னியின் செல்வன்" ஆரம்பிப்பது கூட இதேபோன்ற ஒரு ஆடிப்பெருக்கு விழா அன்றுதான். வீர நாராயணன் ஏரிக்கரை ஓரம் ஆடிப்பெருக்கு விழாவை ரசித்த வண்ணம் வருவதாக வந்தியதேவனை அறிமுகப் படுத்தியிருப்பார் அமரர் கல்கி.
ஒவ்வொரு ஆடிப்பெருக்கு அன்றும், ஓடிவரும் காவிரியும்,இழுத்து சென்ற சப்பரமும்(சிறு தேர்), காவிரிக்கரையில் கையில் கட்டிய மஞ்சள் கயிரும், காதோலை(பனை ஓலை) கருகமணியும், புளி சாதத்தில் தொடங்கி, தேங்காய் சாதம், எள் சாதம் என தயிர் சாதத்தில் முடியும் சித்ரான்னங்களும் நினைவுக்கு வராமல் இருக்காது.
அதே நினைவில் ஜானகியின் குயிலோசையுடன் "ஆடி பதினெட்டாம் பெருக்கினைக்" கொண்டாட கீழே உள்ள Play பட்டனை அழுத்துங்கள்.