63. காட்சி ஒன்று, காலம் மூன்று.


நமது சிந்தனை, செயல்கள், விருப்பு, வெறுப்புகள் அனைத்தும் எப்போதும் ஒன்று போல் இருப்பதில்லை. சிறு வயதில் அதிகம் விரும்பப்பட்ட விளையாட்டு, இளைஞன் ஆனதும் போர் அடித்துப் போய் வேறு ஒரு விளயாட்டில் ஈடுபாடு அதிகமாகிறது.

காலம் மாறும் போது, அந்தந்த கால சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போல நமது விருப்பங்களும், செயல்களும் மாறிப்போகின்றன.

ஒரு காட்சியை காணும் போது நமது செயல்பாடு ( Reaction ) சிறு வயதில் இருப்பதைப் போல வாலிப வயதில் இருப்பதில்லை. வாலிப வயதில் இருப்பதைப் போல வயோதிகத்தில் இருப்பதில்லை.

இங்கேயும் அப்படித்தான். ஒரே காட்சி! ஆனால் வெவ்வேறு காலகட்டங்கள்.

காட்சி இதுதான்: பெண் ஹாலில் ஸோபாவில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். நேரம் சென்று வரும் ஆண் அவளுக்கு எப்படி உதவுகிறான், அவளது reaction எப்படி இருக்கும் என்பதுதான்.


வரிசையாக, ஒன்றை பார்த்து முடித்து விட்டு அடுத்த viedoவைப் பார்க்கவும்.

காலம் 1: திருமணத்திற்கு முன்பு


காலம் 2: திருமணம் ஆன புதிதில்.


காலம் 3: திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்கு பின்பு


62. தண்ணீர்..!. தண்ணீர்...!


குடிநீர்

கிராமங்களில் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் குடிநீரை, பக்கத்தில் உள்ள ஆற்றிலோ, குளத்திலோ அல்லது ஊர்ப் பொது கிணற்றிலோ எடுத்து வந்து உபயோகப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

(அப்பாப்பா என்ன வெயில்!)


















கோடையில் ஆறு குளங்கள் வற்றி விடுவதாலும், மழை நாட்களில் அவை மாசு படுவதோடு, தூரமாக சென்று எடுத்து வர சிரமமாக இருந்ததாலும் அவர் அவர் வீடுகளில் கிணறுத் தோண்டி அந்த நீரை குடிநீர் ஆக்கிக் கொண்டார்கள்.


(ஆத்தாடி எவ்வளவு ஆழம்!)












கிணறுத் தோண்ட இட வசதி இல்லாதவர்கள் அடி பம்பு வைத்து நிலத்தடி நீரை எடுத்துக் கொண்டனர்.





நிலத்தடி நீர் குறைந்து பம்பில் காற்று வர ஆரம்பித்ததும் நகரங்கள் போல, பஞ்சாயத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டி, ஆழ்துளை பம்பு மூலம் நீரை ஏற்றி குழாய்த் தண்ணீரை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர்.

(குடிக்க குடிக்க தாகம் தணியலயே!)










தற்போது ஒரு படி மேலே சென்று அனைத்து வீடுகளிலும் பாட்டில் தண்ணீர் (மினரல் வாட்டர்) வாங்கத் தொடங்கி விட்டனர்.


முன்பெல்லாம் தண்ணீர் பாட்டிலோடு யாரவது அலைந்தால், அவர்கள் அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் " IT"   இன்ஜினியர் என்று தெரிந்து கொள்ளலாம். அவர்கள் இந்தியா வந்தால், பை இல்லமல் வெளியில் புறப்பட்டாலும் பறப்படுவார்களேத் தவிர, மினரல் வாட்டர் பாட்டில் இல்லாமல் படிதாண்ட மாட்டார்கள். "இன்பெக் ஷன்" ஆகிவிடுமாம்.

இன்று நிலமை மாறிவிட்டது. வயலுக்குச் செல்லும் விவசாயி முதற்கொண்டு மினரல் வாடர் பாட்டில் சகிதம்தான் புறப்படுகிறார்கள்.


ஒரு காலத்தில் ரயிலில் பயணம் செய்பவர்கள் சாப்பாடு மட்டும் தான் வீட்டிலிருந்து கட்டிச் செல்வார்கள். ரயில் எங்கெல்லாம் நிற்குமோ, அங்கு இறங்கி அந்த ஊர் தண்ணீரைப் பிடித்துக் கொள்வார்கள்.
இப்போது அப்படி இல்லை. எல்லாம் மினரல் வாட்டர் மயம்தான்.

திருமணம் போன்ற வீட்டு விழா விருந்துகளில் கூட இப்போது 1/2 லிட்டர் பாட்டிலை, ஒவ்வொரு இலைக்கும் வைத்து விடுகிறார்கள். கூஜாவில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அலையும் வேலை மிச்சம்.

அவ்வளவு ஏன்? டாஸ்மார்க்குச் செல்லும் குடிமகன்கள் கூட, மிக்ஸிங்கிற்காக வாட்டர் பாட்டிலை கையோடு கொண்டு செல்கின்றனர்.

சரி. என்ன செய்ய? ஊர் ஓடும் போது நாமும் சேர்ந்து ஓடித்தானே ஆக வேண்டும். அந்த அளவிற்குத்தான் நிலத்தடி நீரை மாசு படுத்தி விட்டோமே.

இதைக் காரணமாகக் கொண்டு, ஊருக்கு ஊர், "மினரல் வாட்டர்" என்று சாதா நீரை அடைத்து விற்க ஆரம்பித்து விட்டார்கள்.

பிராண்டட் கம்பெனியின் மினரல் வாட்டரை வாங்கி இதை தவிற்க நினைத்தாலும், அதிலும் சிறந்ததாய் பார்த்து வங்க வேண்டும்.


"மினரல்ஸ்" என்னும் போதே அதில் பல் தாது உப்புக்கள் அடங்கி இருப்பது தெரியும். ஆனால் ஒரு சில, அளவு கூடினால் அதனால் ஆபத்கும் இருக்கிறது.
சுவைக்காகவும், கடினத்தன்மையை குறைக்கவும் அதில் சேர்க்கப் படும் சில தாதுக்கள் சிறுநீரகத்தையும், இதயத்தையும் கூட பாதிப்பை உண்டாக்கும்.

அதில் சேர்க்கக் கூடிய ஒவ்வொரு தாது உப்பின் அதிக பட்ச்ச அளவை அந்தந்த நாட்டின் அரசாங்கமும், பன்னாட்டு அளவை பின்பற்றியோ சொந்தமாகவோ நிர்ணயத்துள்ளது.

அல்ஜீரியாவில் கிடைக்கும் நான்கு பெரிய கம்பெனிகளின் மினரல் வாட்டரை ஒப்பிட்டு கீழே ஒரு அட்டவணையை இணைத்துள்ளேன். அதில் தாதுக்களின் நிர்ணயக்கப் பட்ட அதிக பட்ச அளவும் (As per International Botteled Water Association IS 13428), அது கூடினால் ஏற்படும் விளைவுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது. ( Source from www.capitalhealth.ca)

படத்தை கிளிக் செய்து பெரியதாக்கிப் பார்த்துக் கொள்ளவும்.


கால்சியம் உப்பு சிறுநீரகக் கல்லையும், சோடியம் - ஹார்ட் அட்டாக்கையும் ஏற்படுத்தும் என்பது தெரியவரும்.

அந்த இரண்டின் அளவும் குறைவாக இருப்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

லிஸ்டில், "Nestle" வை விட "Khedidija" சிறந்தது என்பது புரிய வரும்.

எனவே அடுத்தமுறை வங்கும் போது இந்த அளவுகளை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கவும்.

( ஆமாம், "மினரல் வாட்டருக்கு" சரியான தமிழ்ச் சொல் என்ன? )

12 இட்லியும் ஒரு குவாட்டரும்.

"புரிதல் திலகம் யார்?"


சில சமயங்கள்ள, "முக்கிய" செய்தியவிட,  அதுக்கு நம்ம ஆளுங்க அடிக்கிற கமெண்டு, ரொம்ப ரசிக்கும் படியா இருக்கும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சொன்ன இட்லிக் கதையைப் பத்தி,  பேப்பர்ல வந்தத எல்லாரும் படிச்சிருப்பீங்க.  அதுக்கு "மாலைமலர்"ல வந்த,  வாசகரோட எதிர் கதைய கொஞ்ச பேருதான் பார்த்திருப்பாங்க.

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ் "வலை"யகமும் என்று,  ரெண்டு கதையையும் காப்பி அண்டு பேஸ்ட்டு பண்ணியிருக்கேன்.

படிச்சு முடிச்சுட்டு, போறத்துக்கு முன்னாடி,  "புரிதல் திலகம்"  பட்டத்துக்கு தகுதியானவர், ஜெயலலிதா சொன்ன கணவனா?, நம்ம அண்ணாச்சி சொன்ன மனைவியா? அப்படின்னு தீர்ப்ப சொல்லிட்டுப் போங்க. 


செய்தி(கதை):


சென்னையில் 64ஜோடி திருமண விழாவில் முதல்மைச்சர் ஜெயலலிதா சொன்ன இட்லி கதை:




“புரிதல் என்கிற ஒரு வார்த்தையில்தான் மண வாழ்க்கையின் வெற்றி என்பது உறுதியாகிறது. அந்தப் புரிதலைத் தருவது அன்பு. உண்மையான அக்கறையில் எழுகின்ற அன்பு. இதற்கு ஒரு சிறு கதையை இங்கே நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்காக இட்லி ஊற்றுகிறாள். மொத்தமாக 12இட்லிகள்தான் அந்த மாவில் இருந்து அவளால் தயாரிக்க முடிந்தது.

சரி,கணவன் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை நாமும் சாப்பிட்டு இன்றைய பொழுதை கழித்துவிடலாம் என்று எண்ணியவாறே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கணவன் தனது பால்ய சிநேகிதன் ஒருவனை கூடவே அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான்.

அப்படி அழைத்துக் கொண்டு வந்தவன் "எனக்கும் என் நண்பனுக்கும் உணவு எடுத்து வா´என்று கூறினான். பின்னர் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள்.

அடுப்பறையில் இருப்பது 12இட்லிகள் தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும்,அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள்.

மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள். வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில்,கணவன் சொன்னான்,

"எனக்குப்போதும்.நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?’என்று .

அருகில் ரசித்து,ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது!

அந்த நேரத்தில் இவளோ ´அண்ணா உங்களுக்கு...´ என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க, ´போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...´ என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன்.

 கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்ற போது "மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு" என்று கணவன் சொல்ல,தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே,தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு. அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!

இந்தக் கதையில் நாம் பார்த்த தம்பதியினரின் புரிதலைப்போல, இன்று மணம் முடித்திருக்கும் மணமக்களாகிய நீங்களும்,ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.’’

இப்போ கமெண்டு (எதிர் கதை):




அல்லாடி கூட்டத்தில் திண்டாடி கிடைத்ததோ குவட்டர்தான், இதுவே போதாது என்ற வருத்தத்தில் வந்தவனுக்கு திடீர் நண்பன் கிடைக்க, ஒன்றும் புரியாமல் அவனையும் கூட வீட்டுக்கு அழைத்து வந்தான், 

வீட்டுக்கு வந்தவுடன், "இரண்டு கிளாச்சும் ஊறுகாயும் கொண்டு வா"  என்று மனைவியை விரட்ட,  அவளோ உள்ளிருந்து துடைப்பத்தை எடுத்து வந்து, "நேற்றுதானே இனிமேல் குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள்,  இனி குடித்தால் உங்களுக்கு துடைப்பத்தில் அடி விழும்"  என்று எச்சரிக்க, கணவன் குடிப்பதை விட்டு  எழுந்தான்,

 கணவனின் நண்பனை பார்த்து,  "அண்ணா!  நீங்கள் குடிங்கள்"  என்று சொல்ல,  அவனோ "இல்லை,  நான் குடிப்பதை விட்டு ரொம்ப நாள் ஆச்சி" என்று சொல்லி விடைபெற்றான். 

கணவனின் நண்பன் போன பிறகு மனைவி கணவனுடன் "இப்போ குவாட்டரை முழுசா குடிங்க, இதுவே உங்களுக்கு பத்தாதுன்னு எனக்கு தெரியும்"  என்று மனைவி சொல்ல, கணவன் தன்னை முழுவதுமாக புரிந்து வைத்திருக்கும் மனைவியை கண்டு வியந்தான். 

இப்போ இருக்கிற தமிழ்நாட்டின் நிலையில் இப்படி கதை சொன்னால்தான் அவங்களுக்கு புரியும்...

சரி இப்போ தீர்ப்ப சொல்லுங்க:

"புரிதல் திலகம்"  பட்டத்துக்கு தகுதியானவர், 
ஜெயலலிதா சொன்ன கணவனா?, 
நம்ம அண்ணாச்சி சொன்ன மனைவியா? 



Related Posts with Thumbnails