19.தமிழில் டைப்செய்ய


தமிழில் டைப்செய்ய



கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதையாக IT வல்லுனர்கள் நிறைந்த வலைத்தளத்தில், இது தேவையில்லாத பதிவுதான். அதுவும் ஒரு சிறு துறும்பு கூட சொந்த சரக்கு இதில் இல்லை. சுரதா அவர்களின் சரக்கை அனுமதியுடன் வாங்கி க்ருபா உபயோகப் படுத்தி இருந்ததை வெட்டி, ஒட்டி, அட்டைப்பெட்டியில் அடைத்து எடுத்து வந்திருக்கிறேன்.


மேலே உள்ள Linkகை கிளிக் செய்யவும். Open ஆகும் பக்கத்தின் கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்து Html file ஆக Save செய்யவும்.

Notepad ஆக downloadஆனால், Menuவில் File - saveas ஐ கிளிக் செய்யவும். File name பகுதியில் .html சேர்த்து Tamil Writter.html என்று டைப் செய்யவும். Encoding பகுதியில் arrow ஐ கிளிக் செய்து UTF-8ஐ தேர்ந்தெடுத்து Desktop அல்லது My Documentல் Save செய்யவும்

அவ்வளவுதான் உங்கள் தமிழ் ரைட்டர் ரெடி.

இதன் சிறப்பு:

நீங்கள் Onlineல் இல்லாத போதும் உபயோகப் படுத்தலாம்.

இதை install செய்யத் தேவையில்லை.

இந்த fileஐ flash driveல் save செய்து எந்த கணனியிலும் உபயோகப்படுத்தாலாம்.

சிலருடைய கணனியில் security settingleல் popupblocker ஆல் தடை செய்யப்பட்டுருப்பதாக காட்டினால் information bar ஐ கிளிக் செய்து "Allow blocked content" ஐ தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இதன் பிறப்பு:

"ஈகலப்பை இல்லாத நேரங்களில் நம்ம வசந்தன் போன்றோரின் பதிவில் இருக்கும் மொழிமாற்றியைத்தான் நான் உபயோகிக்கின்றேன். நீங்களும் செய்யலாமே"என்று இலவச கொத்தனார் விக்கிபசங்க கொட்டைப் பதிவின் பின்னூட்டத்தில் கூறி இருந்ததும்,

"நம்மட வலைபக்கத்திலியும் அந்தமாரி பொட்டி ஒன்னு போடமான்னு இருக்கன். வெளியூர் போன ரொம்ப உபயோகமா இருக்குங்கோ."என்று ஓகை கேட்டிருந்ததும்,

"வசந்தன் ஐயா, உங்களுக்கு விருப்பமானால் இதை ஒரு பதிவாகப் போட்டு விக்கி பசங்க வலைப்பூவிற்கு நீங்கள் தரலாமே?" என்று வசந்தன் அவர்களை கொத்தனார் கேட்டிருந்ததும்தான் இந்த பதிவை எழுதக் காரணம்.

என் கணனியில் நான் பயன் படுத்திவந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறேன்.

நிரல் தந்தவர்க்கும்,எழுத உரம் தந்தவர்களுக்கும் நன்றி!


Key Board Layout
Photo Sharing and Video Hosting at Photobucket

14 கருத்துரைகள்:

said...

Note Padஆக download ஆகாமல் நேரடியாக Html fileஆகவே download ஆகும் படி fileஐ மாற்றி உள்ளேன். முதல் fileஐ இதுவரை download 39 பேர் செய்துள்ளனர். அவர்களுக்கு downloadல் பிரச்சனை இருந்தால் புதிய fileஐ இறக்கிக் கொள்ளலாம்.

said...

மதி, நான் மட்டும் எங்க அனுமதி எல்லாம் மொதல்ல சுரதாகிட்ட வாங்கினேன். நான் முன்பு கடலமிட்டாய், பொறம்போக்கு போன்ற மென்பொர்ட்களை எழுதிப் பயன்படுத்தி வந்தேன். அதன் அடிப்படையில் serverside கோடிங் வழியாக tsciiல் எழுதுவதை யூனிகோடில் மாற்றி வலைப்பதியவும், வாசகர்களுக்குப் பின்னூட்டம் இடும் வசதியும் செய்துவைத்தேன்.

ஆனால் ப்ளாக்ஸ்பாட்டில் அவ்வாறு செய்ய முடியாது, வெறும் clientside script மட்டும்தான் சாத்தியம் இல்லையா? அதற்கும் 'பொறம்போக்கு' அடிப்படையிலேயே ஒரு தீரு எழுத ஆரம்பித்தேன். பிறகு சுரதா கன்வர்ட்டர் இருக்கிறது இல்லையா, அதை அடிப்படையாக வைத்துப் பண்ணினால் நிறைய நேரமும் மிச்சமாகும் அதோடு நம்ப சுரதா இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டார் என்று நம்பிக்கையில், அதன் அடிப்படையிலேயே மாற்றி எழுதினேன். நல்லவேளை, சுரதா ச்சமத்து, என்னை அதுக்கெல்லாம் ஒன்னும் திட்டலை.

என்ன இருந்தாலும் மத்தவங்க codeஐ நம்ப codeனு யாரும் நெனச்சுடக்கூடாது இல்லையா? அதனால அது சுரதா எழுதினதோட உதவியால பண்ணினதுன்னு அழுத்தந்திருத்தமா வரலாற்று ஏடுகளில் பதியவைக்கத்தான் (அடேயப்பா!) அவரோட பேர் வெச்சே ஒரு functionஐயும், அந்த disclaimerஐயும் போட்டு இருந்தேன்.

அதன் பிறகு பலரும் இதை modify பண்ணியபோதும் சுரதாவின் பெயரை நீக்காமல் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

said...

நன்றி க்ருபா.
நான் நிரலியை தங்களிடமிருந்துதான் காப்பி அடித்தேன். நீங்கள் சுரதாவின் பெயரை உபயோகப்படித்தி இருந்ததால் நானும் அப்படியே உங்கள் பெயரையும் வைத்திருந்தேன்.சொந்த உபயோகத்திற்கு மட்டுமே பயன் படுத்தி வந்தேன்.
கொத்தனாரின் பதிவைப் பார்த்து மற்றவர்களுக்கும் இது பயன் படட்டுமே என்றுதான் பதிவிட்டேன். நீங்களும் சுரதாவைப் போலவே பெரும் தன்மையுடன், திட்டாமல் அங்கிகரித்து பின்னூட்டமிடதற்கு நன்றி.

வசந்தன் சொல்லியிருப்பதைப் போல பிளாக்கின் கடைசியில் இதனை சொருகுவதை விட இப்படி தனியாக சேமித்து வைத்துக்கொண்டால், பின்னூட்டமட்டுமில்லாது பதிவு எழுதவும் உதவுகிறது.

அது சரி உங்கள் பெயரிலிருக்கும் Linkஐ கிளிக் செய்தால் "Profile not shared" என்று வருகிறதே ஏன்?

said...

என்னடா நம்ப பதிவு தமிழ்மணத்தோட முகப்புல இருந்து போய் ரொம்பநாளாச்சு, ஆனா "தமிழ் ரைட்டர்" Download 90 தாண்டி போய்கிட்டு இருக்கேன்னு ஆச்சர்யமா இருந்துது.
இன்னைக்கு தமிழ் மணத்தோட முகப்ப பாத்த போதுதான் தெரிஞ்சுது இப்பதிவோட Link முகப்புல எப்போதும் தெரியற மாதிரி விளம்பரப் படுத்தி இருக்காங்க.

அதுக்காக தமிழ்மணம் நிர்வாகத்துக்கு நன்றி சொல்லிக் கொள்வதுடன் இந்த நிரலியைக் கொடுத்த க்ருபாவிற்கும், உருவாக்கிய சுரதாவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.

said...

அன்பு மதி,

மிகவும் உபயோகமான, தேவையான மென்பொருளைத் தந்ததற்கு மிக்க நன்றி.

said...

மிகவும் நண்றி.

றாபி

said...

வாங்க ரஃபி,
இதுவரைக்கும் உங்க பிளாக்கில் ஆங்கிலத்தில்தானே பதிவு எழுதி வந்திருக்கீங்க. இனி தமிழ்ல ஜமாய்ங்க. இன்னும் கொஞ்சம் பழக்கப் படுத்திகிட்டீங்கன்னா தப்பில்லாம டைப் பண்ணலாம்.
{றாபி என்று எழுதுவதைவிட ராஃபி நல்லா இருக்குன்னு நினைக்கிறேன்}

அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

அது வேற ஒன்னுமில்லீங்க மதி, நான் வலைப்பதிவுகளுக்கு ப்ளாகர்அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை. மேல்கைண்ட்-க்கு மட்டுமே ப்ளாகர் பயன்படுத்துகிறேன்.அதனால்தான் profile enable செய்யவில்லை.

மற்றபடி என் வலைப்பதிவுகள் என்று பார்த்தால்,
உதவாக்கரை
புள்ளிவலை

said...

நன்றி மதி. ஆனாலும் ரொம்ப சின்னதாக இருப்பது போல் ஒரு எண்ணம். முடிந்தால் சரி செய்யவும்.

said...

தகவலுக்கு நன்றி க்ருபா

said...

வாங்க லக்ஷ்மி.
சிறியதா இருக்குன்னு டைப் செய்கிற பெட்டியத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். பெரிய பெட்டி வேணும்னா நீங்களாவே தேவையான அளவுக்கு மாத்திக்கலாம்.
அதுக்கு பெட்டிக்கு பக்கத்துல RIGHT கிளிக் பண்ணி View sourceஐ செலக்ட் பண்ணுங்க (or you can click view menu and select 'sorce') வரக்கூடிய Notepadeலகடைசியில பார்த்தீங்கன்னா row=8col=64 அப்படின்னு இருக்கும் இரண்டு வரிகள்லயும் row,col மதிப்பை 8க்கு பதிலா 16ன்னும், 64க்குப்பதிலா 96ன்னும் மாத்திட்டு Fileஐ click செய்து save செய்யவும். பின் அனைத்தையும் மூடிவிட்டு,மீண்டும் திறந்தால் பெரிய பெட்டி கிடைக்கும். ஏதேனும் பிரச்சனை இருப்பின் தெரியப் படுத்தினால் மின் அஞ்சலில் மாற்றி அனுப்பிவைக்கிறேன்

said...

இப்போ சரி பண்ணீட்டேன். நன்றி.

said...

தீபக் வாசுதேவன் Said:

தாங்கள் வழிகாட்டிய தமிழ் தட்டச்சு எனக்கு மட்டுமின்றி நிறைய பேருக்கு மிகவும் பய்னுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி.

ஒரு சேவை மனப்பான்மையுடன் அதை இணையதளத்தில் பதிந்துள்ளேன்.

எனக்கு நீங்கள் இத்தட்டச்சில் எழுத்துக்களின் வழிகாட்டி பட்மொன்றை அனுப்பி இருந்தீர்கள் அல்லவா? அதை திரும்ப அனுப்ப இயலுமா? அதையும் மேற்கண்ட தட்டச்சுடன் நாம் இணைத்து விட்டால் பலருக்கு உதவியாக இருக்குமல்லவா?

said...

நன்றி தீபக்.
படத்தை தனி மின் அஞ்சலில் அனுப்பி உள்ளேன்.
உங்களது இத் தளம் பலருக்கும் உதவியாக இருக்கும்.
நானும் இந்த பிளாக்கில் இணைப்புத்தருகிறேன்

Related Posts with Thumbnails