23.புத்தாண்டு சபதம்







ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும்,இந்தவருஷம் 'இதைச் செய்யனும்', 'இதைமுடிக்கனும்','இதை செய்யக்கூடாது' என்று ஏதாவது ஒரு குறிக்கோள்(சபதம்) செய்யறது உண்டு.ஏதோ "புதுப் பொண்டாட்டி" கதையா ஆரம்பத்துல சபதத்தை கடைபிடிச்சுட்டு, ரொம்பப் பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிகிட்டுத் திரிவோம். கொஞ்சநாளான்னப் பின்னாலே "பழையக்குருடி கதவத்திறடி"ன்னு யதார்த்த வாழ்க்கைக்கு திரும்பிடுவோம். மத்தவங்க கேட்டா அதுக்கு ஏதாவது காரணத்த உண்டாக்கி சொல்லிடுவோம்.

அதனால இந்த புது வருஷத்துக்கு எந்த சபதமும் எடுக்கக் கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கேன்.

இருந்தாலும் மனசுக் கேக்கல ஏதாவது புதுசா செய்யனும்னு உறுத்திகிட்டே இருந்திச்சு. சரி டைரி எழுதலாம்னா அதுவும் முன்ன சொன்ன மாதிரி 'சுறு சுறுப்பா' ஆரப்பிச்சு'கடு கடுப்பா' முடிஞ்சுடும். என்ன பண்ணலாம்னு யேசிச்சப்பதான் ஒரு ஐடியா தோணிச்சு.

இன்னும் இந்த ப்ளாக்க, புது ப்ளாக்கருக்கு மாத்த தைரியம் வரலை. புது வீட்ல நிறைய பிரச்சனைகள்னு பேசிக்கிறாங்க. அதனால புது ப்ளாக்கர்ல, புது வருஷத்துக்காக, புது ப்ளாக் ஒண்ணு ஆரம்பிச்சு வெள்ளோட்டம் பாத்துட்டு அப்பறமா மாறிக்கலாம்னு'வலைக்காட்சின்னு' ஒரு புது தளத்த ஆரம்பிச்சுட்டேன்.

ப்ளாக்கர ஆரம்பிச்சுட்டு தமிழ்மணத்திலயும், தேன் கூட்லயும் சேர்க்க முடியாம எல்லாரப்போலவும் இப்போ தவிச்சுகிட்டு இருக்கேன்.

'எண்ணச்சுவடியில' எழுதறத்துக்கே நேரம் கிடைக்கல (சரக்கும் ஒண்ணும் இல்லங்கிறது வேற விஷயம்) இதுல புது ப்ளாக்ல என்னச் செய்யன்னு யோசிச்சு கடைசியா இப்படிஒரு காரியம் செய்து வச்ச்சிருக்கேன்.



இதையே அழைப்பா ஏற்று அங்கேயும் ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடுங்க.அப்படியே"வலைக்காட்சி"ங்கற பெயர் காரணத்தயும் தெரிஞ்சுக்கலாம்.

சரி ஏதோ வாழ்த்து சொல்வான்னு நினைச்சா விளம்பரம் பண்ணிகிட்டு இருக்கானேன்னு நினைக்காதிங்க.

செல்வமும், செழுமையும் கொழிக்கட்டும்
நலமும் வளமும் வளரட்டும் என புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவருக்கும் உரித்தாக்குகிறேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.







4 கருத்துரைகள்:

said...

மதி,

/* ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும்,இந்தவருஷம் 'இதைச் செய்யனும்', 'இதைமுடிக்கனும்','இதை செய்யக்கூடாது' என்று ஏதாவது ஒரு குறிக்கோள்(சபதம்) செய்யறது உண்டு.ஏதோ "புதுப் பொண்டாட்டி" கதையா ஆரம்பத்துல சபதத்தை கடைபிடிச்சுட்டு, ரொம்பப் பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிகிட்டுத் திரிவோம். கொஞ்சநாளான்னப் பின்னாலே "பழையக்குருடி கதவத்திறடி"ன்னு யதார்த்த வாழ்க்கைக்கு திரும்பிடுவோம். மத்தவங்க கேட்டா அதுக்கு ஏதாவது காரணத்த உண்டாக்கி சொல்லிடுவோம். */

இதில் என்னை வைச்சு கிண்டல் கேலி ஒன்றும் இல்லைத்தானே? :)) இதை வாசித்த போது எங்கே என்னைப் பற்றி எழுதுகிறீர்களோ என்று நினைத்தேன்! :))

மதி,
உங்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

said...

வெற்றி,
வந்ததிற்கும், பதில் தந்ததிற்கும், வாழ்த்திச் சென்றதிற்கும் நன்றி.

//இதில் என்னை வைச்சு கிண்டல் கேலி ஒன்றும் இல்லைத்தானே? :)) இதை வாசித்த போது எங்கே என்னைப் பற்றி எழுதுகிறீர்களோ என்று நினைத்தேன்! :))//

கண்டிப்பா இல்ல.
நூத்துக்கு தொன்னூரு பேரு இப்படிதான் செய்றாங்க, என்னையும் சேர்த்துதான். வெயில் படம் பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதில் வரும் அந்த "வெயில்" பாட்டைக்கேக்கும் போது நாம் சின்ன வயசுல விளையாண்ட விளையாட்டல்லாம் அப்படியே காண்பிக்கிறாங்க என்று ஆச்சரியப் பட்டேன். பின்னர்தான் தெரிய வந்தது பாதிபேருக்கு அந்த நினைப்பு தான் வந்ததுன்னு. ஏன்னா அந்த பருவத்த பாதிப் பேரு அப்படித்தான் கழிச்சிருக்காங்க.

அது போலதான் இதுவும். நம்மில்ல பாதிப்பேரு நான் சொன்னதுப் போலத்தான் நடந்திருப்பாங்க, உங்களையும் என்னையும் சேர்த்து. அதுதான் அப்படித் தோணியிருக்கு உங்களுக்கு.

எது எப்படியோ, இன்னைக்கு உங்க பதிவ பார்த்தது மூலமா என்னோட வலைக்காட்சிக்கு ஒரு வீடியோ கிடைத்தது.அதுக்கும் சேர்த்து நன்றி.

said...

மதி,

புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

//சரக்கும் ஒண்ணும் இல்லங்கிறது வேற விஷயம்) இதுல புது ப்ளாக்ல என்னச் செய்யன்னு யோசிச்சு கடைசியா இப்படிஒரு காரியம் செய்து வச்ச்சிருக்கேன்.//

சரக்கு இல்லைங்கிறதையெல்லாம் ஒத்துக்க முடியாதுங்க. இப்ப நீங்க இருக்கிற ஊரைப்பத்தியே எத்தனை இடுகை எழுதலாம். தமிழர்கள் அதிகம் இல்லாத, அதிகம் போகாத ஊர்ல இருக்கீங்க. பல புதிய விதயங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். 2007லயாவது செய்யுங்களேன்.

எதிர்பார்ப்புடன்,
மதி

said...

மதி அக்கா,

வாங்க,நீங்க வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

//சரக்கு இல்லைங்கிறதையெல்லாம் ஒத்துக்க முடியாதுங்க//

அக்கா இப்படி மானத்த வாங்கிட்டீங்களே. சரக்கு இல்லாம இல்ல.எழுதறத்துக்கு நேரம்(அட, திறமைதாங்க) வேண்டாமா?
அதத்தான் அப்படி பாலிஷா சொன்னேன்.

நல்லா எழுதறவங்களுக்கு சின்ன நிகழ்ச்சிப்போதும். ஈர பேனாக்கி, பேன, பெருமாளா ஆக்கிடுவாங்க.

நமக்கு பெருமாளே முன்னாடி வந்தாலும் 'பெ,பெ'ன்னு தான் சொல்ல வருமேத் தவிர விளக்கமா, ரசிக்கிற மாதிரி சொல்ல வராது.

இருந்தாலும் உங்கள மாதிரி சீனியர் ஆளுங்களோட எழுத்தப் படிக்கிறோமுள்ள. ஏதாவது தத்தி தத்தி எழுதி உங்கப் பேருக்கு இழுக்கு வராம பாத்துகுவோமுள்ள.

Related Posts with Thumbnails