36. நூதன கொள்ளை


குடந்தை கடையில்

40 பவுன் நகை நூதன கொள்ளை

சகஜமாக பேசி கைவரிசை பலே ஆசாமி துணிகரம்.



கும்பகோணம், அக். 18: கும்பகோணத்தில் நகை கடையில் நூதன முறையில் 40 பவுன் நகையை திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலஅய்யன் தெருவில் வசிப்பவர் பிச்சை (60). இவர் டிஎஸ்ஆர் பெரிய தெரு வில் நகை கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு நேற்று முன்தினம¢ மாலை மாருதி காரில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். பெரிய மனிதர் போன்று தோற்றமளித்த அவர் மகள் திருமணத்துக்கு நகைகள் வேண்டும் என கேட்டுள்ளார். ஊழியர்களை சுண்டி இழுக்கும் வகையில் சகஜமாக பேசினர்.


154 கிராமில் 5 தங்க செயின், 116 கிராமில் 3 நெக்லஸ், 80 கிராமில் 4 ஜோடி தங்க வளையல், ஒரு ஜோடி வைரத்தோடு, இரண்டு நவரத்தின மோதிரம் என ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் நகைகளை ஊழியர்கள் எடுத்து காட்டியுள்ளனர். நகைகளை பார்த்த அந்த நபர், எனது மனைவியிடம் காட்ட வேண்டும் எனக்கூறினார். அந்த நகைகளுடன் கடை உரிமையாளர் பிச்சையை காரில் அழைத்துக்கொண்டு குடந்தை மருதமுத்து நகருக்கு வந்தார்.


அங்கு ஒரு வீட்டுக்கு முன் காரை நிறுத்தி விட்டு அந்த நபர் உள்ளே சென்றார். நகை கடை அதிபர் பிச்சை வரவேற்பறையில் அமர்ந்திருந்தார். நீண்ட நேரமாகியும் நகைகளுடன் சென்றவர் வராததால் பிச்சை வீட்டிற்குள் சென்று விசாரித்தார். அங்கிருந்த ஒரு பெண், வந்தவர் பின்வாசல் வழியாக சென்று விட்ட தாக கூறினார். உடனே வெளியில் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரையும் காணவில்லை. இது குறித்து பிச்சை கும்பகோ ணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.


இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நகைகளுடன் மாயமானவர் வந்த கார் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமானது. அவரிடம் குடந் தை செல்ல வேண்டும் என காரை வாடகைக்கு பேசி எடுத்துச் சென்று உள்ளார். நகைகடையில் கைவரிசை காட்டி விட்டு மீண்டும் தஞ்சைக்கு வந்துள்ளார். தஞ்சை வந்ததும், கிருஷ்ணமூர்த்தியின் செல்போனை வாங்கிக்கொண்டு டவர் கிடைக்கவில்லை என்று ஒரு சந்தில் சென்ற அந்த நபர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி தஞ்சையில் போலீசாரிடம் புகார் அளித்தார்.


இது பற்றி தெரிந்ததும், போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கும்பகோணம் அழைத்து சென்று விசாரித்தனர். நகைகள் மற்றும் செல்போனுடன் சென்ற நபர், குடந்தையில் வீடு வாங்க வேண்டும் என கூறி அழைத்து வந்தார். மருதமுத்து நகரில் ஒரு வீட்டை பார்த்தோம். ரூ.16 லட்சத்துக்கு விலை பேசினார். மாலையில் வாஸ்து நிபுணருடன் வருவதாக கூறி விட்டு கிளம்பியவர் நேராக நகை கடைக்கு சென்று கைவரிசை காட்டி விட்டு மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று பின்வாசல் வழியாக தப்பி வந்து காரில் ஏறினார். நகை கடை அதிபரை வாஸ்து நிபுணர் என அந்த வீட்டில் தெரிவித்தார். தஞ்சை வந்ததும் காருக்கு வாடகை தராமல் எனது செல்போனையும் கொ ண்டு சென்று விட்டார் என கார் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம் தெரிவித்தார். நகைகளுடன் சென்ற நபரின் புகைப்படத்தை கணினி யில் வரையும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த நபரை பிடிக்க கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


பெரிய மனிதர் தோரணை. எளிதாக பிறர் தன்னை நம்பிவிடும் வகையில் கனிவான பேச்சு. இதுதான் அந்த பலே ஆசாமியின் மூலதனம். இதை வைத்தே வாடகை கொடுக்காமல் கார் டிரைவரை ஏமாற்றியதுடன், அவரது செல்போனையும் உரிமையுடன் கேட்டு வாங்கி எடுத்துச் சென்றுள்ளார். நகைகளை கொள்ளையடிக்கும் முன் வீடு, வாஸ்து, மனைவி என்று ஒரு நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார். கத்தியின்றி, ரத்தமின்றி, கடையின் பூட்டை கூட உடைக்காமல் உரிமையாளரிடமே உரிமையுடன் கேட்டு வாங்கி அந்த நபர் நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
நன்றி
தினகரன்
18/10/07

1 கருத்துரைகள்:

said...

மருதமலை யில் வரும் பாசக்கார வடிவேலு போலத்தான் தெரிகிறார் கடைக்காரர்.
எந்த புத்திசாலி நகைக்கடை காரரும்,நீங்கள் பார்க்க வேண்டியவரை அழைத்துக் கொண்டு கடைக்கு வாருங்கள் என்றுதான் சொல்வாரே தவிர,எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வாடிக்கையாளர் பின்னால் செல்ல மாட்டார்...
The shop owner deserves this..
உலகில் ஏமாறுகிறவர் இருக்கும் வரை ஏமாற்றுபவ்ர் இருப்பார் !!!!!

Related Posts with Thumbnails