47.சிம்ரன் Fight
பண்பாடற்ற செயல் யாருடையது?
சிம்ரன் fight என்ற தலைப்பில் Youtube ல் கண்ட வீடியோ இது. சன் டிவியின் ஒரு நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது சிம்ரனுக்கும் விஜய் ஆதிராஜ்க்கும் இடையில் நடந்த பிரச்சனையை படம் பிடித்து சன் டிவியில் சென்ற ஆண்டு ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி.
முதலில் வீடியோவை முழுமையாக பார்த்து விடுங்கள்.
சரி வீடியோவை பார்த்து விட்டீர்களா? இப்போது சொல்லுங்கள் இதில் யார் Manners இல்லாமல் நடந்து கொண்டது?
தான் நடத்தும் Programmeன் Judgeஐ மற்றவர்கள் கேட்டார்கள் என்று விமர்சனம் செய்த விஜய்யின் போக்கு பண்படான செயலா?

விஜய் சொல்லுவது போல ஏதேனும் பிரச்சனை இருந்தால் தனியாக கூப்பிட்டு சண்டை போட்டுக் கொள்ள வேண்டியது தானே. ஏன் பப்ளிக் ப்ரொகிரம் மில் வந்து பிரச்சனையை சிம்ரன் கிளப்ப வேண்டும்? சிம்ரன் செய்தது பண்படான செயலா?
சரி! பிரச்சனைதான் ஆரம்பமாகிவிட்டதே,"Will you please just unroll the camera" என்று சிம்ரன் கேட்டுக் கொண்ட போதே Camera வை நிறுத்தி இருக்க வேண்டாமா?
“கொஞ்சம் கட் பண்ணுங்க Please” என்று விஜய் இரண்டு மூன்று முறை சொன்ன பிறகாவது cut பண்ணி இருக்கலாம்,
“Personக்கு ஒரு privacy வேண்டாமா?” என்று சிம்ரன் கெஞ்சிய உடனாவது stop செய்திருக்க வேண்டும். அப்படி அல்லாது அதையும் Camarea Man recording செய்தது பண்படான செயலா?
அவர் தான் record செய்து விட்டார், பிரச்சனையை அத்தோடு விடாமல் அதை TV ல் போட்டு இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடை நாடறிய செய்த TVன் செயல் பண்பாடானதா?

அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை அதை Youtubeல் Post செய்து, TV பார்க்காதவர்களுக்கும் படம் போட்டு காட்டி இருக்கிறார்களே இது பண்படான செயலா?
அட, அதெல்லாம் போகட்டும். ஒரு வருஷத்திற்கு முன்பு நடந்த விஷயத்தை எடுத்து, குப்பையை கிளறி, வேறு வேலை(சரக்கு) இல்லாது, மீண்டும் இங்கே பதிய வைத்திருக்கிறேனே நான் செய்தது பண்படான செயலா?
இதில் யார் Manners இல்லாமல் நடந்து கொண்டதில் முந்துகிறார்கள்?
2 கருத்துரைகள்:
அவர் தான் record செய்து விட்டார், பிரச்சனையை அத்தோடு விடாமல் அதை TV ல் போட்டு இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடை நாடறிய செய்த TVன் செயல் பண்பாடானதா?
///
உண்மைதான்!! டி.வி தவிர்த்திருக்கலாம்!!
வருகைக்கு நன்றி தேவன் மாயம்.
டிவிதான் Personal வாழ்க்கையில் Sensational News ஏதும் கிடைக்காதா என்று கழுகாய் பார்த்துக் கொண்டிருப்பார்களே.
அவல் கிடைத்தாலே விட மாட்டார்கள்.
அல்வா கிடைத்திருக்கிறது,அதுவும் அவர்களது Studioவிலேயே,
விடுவார்களா?
Post a Comment