50. சிரிப்பு



சிரிப்பு பற்றியும் அதனால் ஏற்படும் மருத்துவ பயன்கள் பற்றியும் தினம் டி.வி காமடி ஷோவில் பல குறிப்புகளை கேட்டிருப்போம். அதே சிரிப்பு ஒரு தொற்று நோயும் கூட. நாம் சிரிப்பதற்கு ஜோக்குகளை படிக்கவோ காமடி சீன்களை பார்க்கவோ கூட வேண்டாம். மற்றவர்கள் சிரிப்பதை பார்த்தாலே அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

வகுப்பறையில் வாத்தியார் அடித்த ஜோக்குக்கு சிரித்ததை விட, ஜோக்கு அடித்து விட்டு அதற்கு அவரே குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது, அவரது தொப்பை ஆடுவதைக் கண்டு சிரித்ததே அதிகம்.

1.சிரிப்பு: ஒலி

இதோ கலைவாணர் N.S.K இந்தப் பாட்டில் சிரிப்பின் வகைகளைப் பற்றிச் சொல்லி அவரே சிரித்துக் காட்டும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. இந்த நகைச்சுவைப் புதையலை, PLAY பட்டனை அழுத்தி, கேட்டு சிரியுங்கள்.


2. சிரிப்பு: ஒலியும் ஒளியும்

புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு என்று சில கிராமங்களில் சொல்ல கேட்டிருக்கலாம். ஆனால் திருமணத்தன்றே இந்த மணப்பெண், மணமகன் மாற்றிச் சொல்லிய ஒரு வார்த்தையைக் கேட்டு எப்படி அடக்க முடியாமல் வெடிச் சிரிப்பை உதிர்க்கிறார் என்று பாருங்கள். அந்த சிரிப்பு கண்டிப்பாக நம்மையும் ஒட்டிக் கொள்ளும்..

2 கருத்துரைகள்:

said...

அருமையான பதிவு நகைச்சுவை ஒவ்வொரு வார்த்தைகளிலும் ததும்புகிறது . பகிர்வுக்கு நன்றி எங்குதான் இதுபோன்ற விடியோக்கள் கிடைக்கிறது உங்களுக்கு !?

said...

கண்களில் ஆனந்த பனித்துளி ததும்புகிறது சங்கர். நான்குஆண்டுகளில் 11000 பேர்களுக்கு மேல் இங்கு தடம் பதித்துள்ளனர். முதல் ஆளாக தொடர்வதற்கு நன்றி.

இது போன்ற நகைச்சுவை வீடியோக்களை தேடி கண்டு பிடிப்பது ஒன்றும் பெரியதில்லை, 1800க்கும் மேற்பட்ட பிளாக்குகளை தொடர்கிறீர்களே, பெரிய சாதனைதான்

Related Posts with Thumbnails