60.சிரித்து வாழ வேண்டும்,



2011 க்கு விடை கொடுத்து விட்டு 2012ல் காலடி எடுத்து வைக்கிறோம். பழமையை திரும்பிப் பார்த்தால், மகிழ்ச்சி, சோகம், வெற்றி, தோல்வி, வரவு, செலவு என்று பல கலந்த கலவையை சந்தித்து இருப்பது தெரிய வரும்.

 அவை கொடுத்த பாடத்தைக் கொண்டு எதிர் வரும் இந்த ஆண்டை மேலும் சிறப்பான பலன்களைப் பெற முயற்சிப்போம்.

வாய் விட்டு சிரித்து இப்புத்தாண்டை ஆரம்பிபோமே.

இணயத்தில் நான் ரசித்த சில "கணவன் மனைவி" ஜோக்குகளை இங்கே தொகுத்துள்ளேன்.

மணமானவர்கள் என்றால் ஏதேனும் ஒரு ஜோக்குக்காவது சிரித்து இருக்க வேண்டும்.



1." உங்க சம்சாரம் உங்களை பளார்னு கன்னத்துல அறையறா..பார்த்துட்டுசும்மா இருக்கீங்களே..?

"சும்மா இல்லாம..? எதுக்கு அடிச்சே?ன்னு எதிர்த்துப்பேசி இன்னொரு கன்னத்துலயும் அடி வாங்க     சொல்றீங்களா?"

******

2. மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
 கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான் அவன்!!


******

3. மனைவி: என்னங்கஅதோ குடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே போறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு!


கணவன்: அவன் கொடுத்து வச்சவன்அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னுதான் ஆச்சர்யமா இருக்கு!








4.மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டாஎன்ன பண்ணுவீங்க?


கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.


மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?


கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.


*******

5. (புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்)
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…?


வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??


********


6. சினிமா தியேட்டரில் மனைவி : ஏங்க, பின்னாடி ஒருத்தான் காலை விட்டு சுரண்டிக்கிட்டே இருக்கான்.
                                                                    
கணவன் : பின்னாடி திருப்பி உன்னோட மூஞ்சை காட்டு...! சனியன் சாவட்டும்.                 




7. "கல்யாணத்துக்குப் பிறகு என்னோட தோஷம்  விலகிப்போயிடும்னு ஜோசியர் சொன்னது பலிச்சிடுச்சி."
"அப்படியா?! என்ன தோஷம்?" 
"சந்தோஷம்"
*********

8. னைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்எனக்கு மாசம்  எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
ணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே…!


*******


9. கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சேவேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்ககூடாது
கடவுள்: சரி சரிஅமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?!!


*******

சரி அப்படியும் சிரிப்பு வரலியா? மனைவியை விரட்ட இவர் செய்யும் ஐடியாவையாவது வீடியோவில் பார்த்து சிரிக்க முயற்சி செய்யுங்கள்.




அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்





6 கருத்துரைகள்:

said...

புத்தாண்டு சிறப்புப் பதிவு அருமை
இவ்வாண்டின் முதல் பதிவாக
சந்தோஷமாக தங்கள் பதிவைக் கண்டு
படித்து ரசித்துச் சிரித்துத் துவங்குகிறேன்
அருமையான நகைச் சுவைப் பதிவு
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 1

said...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ரமணி அவர்களே.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

said...

ரைட்டு...

said...

ரசிக்க வைக்கும் தங்களின் அனைத்து நகைச்சுவை துணுக்குகளுக்கும் ஒரு சபாஷ்....

said...

மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

said...

அருமையான நகைச் சுவைப் பதிவு
பகிர்வுக்கு நன்றி

Related Posts with Thumbnails