03. மெய்ப்பொருள் காண்பதறிவு - 1



மெய்ப்பொருள் காண்பதறிவு

நாம் அடிக்கடி கேள்விப்பட்ட பழமொழிகள் பல தற்போது நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருளில் தான் சொல்லப்பட்டதா என்பது எனது நீண்ட நாளைய சந்தேகம்.

மறைந்த தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பேச்சின் ஒலிப்பதிவை அண்மையில் கேட்க்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு பழமொழிக்கு புது விளக்கம் தந்திருந்தார். அதன் வழியே யோசித்துப் பார்த்த போது பலவற்றினுக்கு மெய்ப்பொருள் வேறாக இருக்குமெனத் தோன்றுகிறது.

"அரசனை நம்பி புருஷனை கை விட்டது போல" என்ற ஒரு சொல் நம் நாட்டில் வழங்கி வருகிறது.

அதற்கு நேரடியான அர்த்தமாக நாம் புரிந்து கொண்டிருப்பது: ஒரு பெண் தன் கணவனை விட்டு விட்டு ராஜ வாழ்க்கை வாழ அரசனுடன் சென்று பின் அவனால் அந்த புரத்தில் நூற்றோடு ஒன்றாக தள்ளப் பட்ட போது
'அரசனை நம்பி வந்தது எவ்வளவு தவறு' என்பது புரிய வந்தது என்பதாகும்.


எனவே அரசன் என நினைத்து இருக்கும் புருஷனை கைவிட்டு மற்றவரை நம்பிச் செல்ல வேண்டாம் என சொல்ல வந்தது போல் அந்த பழஞ்சொல்லை நாம் வழக்கத்தில் கையாண்டு கொண்டிருக்கிறோம்.


உண்மையில் அதன் அர்த்தம் வேறு என்பது வாரியார் அவர்களின் வாதம். கற்பில் சிறந்த க்ண்ணகி வாழ்ந்த தமிழ் நாட்டில் பெண்களைப் பற்றி இழிவாக அப்படி ஒரு சொல் ஏற்பட்டிருக்குமா?

பின் அதன் உண்மைப் பொருள்தான் என்ன?


முன் காலத்தில் திருமணமாகியும் குழந்தை பிறக்காத பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருந்துவந்தது. ( அது உண்மை என்றும்,அரசு மற்றும் வேப்ப மரக் காற்றில் உள்ள வாயுமூலக்கூறுக்களை பெண்கள் சுவாசிக்கும் போது கர்ப்பப்பையில் உள்ள கிருமிக்கள் இற்ந்து, கர்ப்பப்பை சுத்தமாகிறது என்பதும் தற்போது அறிவியல் கூறுகிறதாமே!) 'அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றைப் பார்த்தது போல' என்று அவசரப்படும் ஜென்மங்களுக்குச் சொல்லப்படும் எடுத்துக்காட்டிலிருந்தும் அரச மர நம்பிக்கையை அறியலாம்.


எனவே குழந்தைப் பேறு வேண்டி ராத்திரிப்பகலாக அரசமரத்தடியிலேயே தவம் கிடக்க ஆரம்பித்து விட்டனர் அக்காலப் பெண்கள். வீட்டில் கணவன் என்று ஒருவன் இருக்கிறான்,அவனது துணையும் இதற்கு அவசியம் என்பதினையும் மறந்து விட்டனர். அவர்களது நம்பிக்கை நடைமுறைக்கு உதவாதல்லவா? இதனைக் குறிக்கவே "அரசை (அரச மரத்தை) நம்பி" என்று இருந்திருக்க வேண்டியச் சொல்"அரசனை நம்பி" என்று மாறி(மருவி)யிருக்க வேண்டும்.

எனவே இனி இப்பழ மொழியை " அரசை நம்பி புருஷனை கை விட்டது போல" என்றே கூறுவோம்.

2 கருத்துரைகள்:

said...

வணக்கம். வாழ்த்துகள் ; மற்றொரு சீர்காழி வட்டாரத்து பதிவர் என்றறிய மகிழ்ச்சியும்.

வாசன்

அல்புகர்க்கி, புது மெக்சிக்கொ
அமேரிக்கா


கொள்ளிடம்

said...

"... ஒரு சிலருக்கு 92ல் Ross Perot அமேரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போது, துணை அதிபர் பதவிக்கு கூடவே போட்டியிட்ட James Stockdale சொன்ன மாதிரி Why am I here, what am I doing here. இது என் மாதிரி ஆட்களுக்கு..."-
இது முன்பு நீங்கள் பதிந்த வார்த்தைகள். அப்படியே எனக்கும் பொருந்தும். வாழ்த்துக்கு நன்றி

Related Posts with Thumbnails