04.சத்திய சோதனை


சத்திய சோதனை
(வேறு ஒன்றுமில்லை சுயபுராணம்
என்பதினைத்தான் அப்படி முலாம் பூசிச் சொன்னேன். காந்தியடிகளை அவமானப்படுத்து போல உண்ர்ந்தால் அடிக்க வராதீர்கள்,அடிக் கோடிட்டுக் காட்டுங்கள். நானே நடுக்கோடிட்டு அடித்து விடுகிறேன்)

ரேஷன் கார்டில் பதிவுசெய்ய முயன்று கணக்கு எடுக்கும் நேரத்தில் ஊரில் இல்லாததால் விடுபட்டுப் போயிற்று (புதிய கார்டுக்கு நாயாய் அலைந்து கொண்டிருப்பது தனிக்கதை)

பின்னர் வோட்டுப் போடவாவது அடையாள அட்டை வாங்கலாம் என்று இருந்த போது நாடு விட்டாயிற்று. (இனி அடுத்தத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதுதான்)

எனவேதான் வலை ஆரம்பித்த உடனே, மதுமதி அவர்கள் கணக்கு எடுக்கிறார் என்றதும் ஓடி (தவழ்ந்து) வந்து வரிசையில் நிற்கிறேன். (பதிவுக்கான கெடு முடிந்து விட்டதா?)

வலைப்பதிவர் பெயர்:
மதி

வலைப்பூ பெயர் :
எண்ணச்சுவடி (பெயரைப் பார்துவிட்டு ஏதோ பழைய பஞ்ஞாங்கம் என நினைத்து விடப் போகிறீர்கள்)

சுட்டி(url) :
perunthottam.blogspot.com

ஊர்:
சீர்காழியை அடுத்த சிறு கிராமம்-பெருந்தோட்டம். தற்போதய வாசம் மயிலாடுதுறை

நாடு:
இந்தியா. (தற்போது இருப்பது நைஜீரியாவில்)

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
கணனிதான், வலையில் உலா வரும் போதுதமிழ்மணம் வலையில் வீழ்ந்தேன். நானும் வலைப்பூவாய் பூத்தேன்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
27 மே, 2006

இது எத்தனையாவது பதிவு:
நான்காவது

இப்பதிவின் சுட்டி(url):

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
(நம்மால் தமிழ் கொஞ்சம் வளரட்டுமே என்றுதான் என்றால் உதைக்க வர மாட்டீர்களா?) நான் கண்ட, கேட்ட,படித்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள/பதிவுசெய்து வைக்க.

சந்தித்த அனுபவங்கள்:
இப்போதுதானே மொட்டு விட்டிருக்கிறேன்.மலர்ந்து மாலையாகும் போதுதானே அனுபவம் அதிகரிக்கும்

பெற்ற நண்பர்கள்:
பல நல்ல உள்ளங்கள்.

கற்றவை:
எல்லாவற்றிலுமே இன்னும் கத்துக்குட்டிதான் (ஒன்றும் உருப்படியாகத் தெரியாது என்பதினை இப்படி நாகரீகமாகச் சொல்லலாம் அல்லவா)

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
தடையிருக்காது என நம்புகிறேன்

இனி செய்ய நினைப்பவை:
(நாவல்கள், காவியங்கள் எழுதுவது என்றால் நம்பவாப் போகிறீர்கள்) பல விஷயங்களை பகிர்வதை தொடர்வது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
காவிரி நதிக்கரையில் பிறந்து,வளர்ந்து, பாலாற்றங்கரையிலே (ராணிப்பேட்டை)பிழைப்பு நடத்தி, திரைகடல் ஓடி திரவியம் தேடி,அரபு நாட்டு வெய்யிலில் காய்ந்து,அசர்பைஜான் பனியில் உறைந்து, நைஜீரியாவின் மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
வாழ்க தமிழ்! வளர்க நட்பு !

4 கருத்துரைகள்:

said...

வாங்க வாங்க.

வாழ்த்து(க்)கள்.

அது ஏங்க 'திட்டம், தோட்டம்'னு
வந்திருக்கு. உங்க சுட்டியைப் பாருங்க.
அப்புறம் இதை சேகரிக்கறவங்க பேர்
'மதுமிதா'

எல்லாருக்கும் ஒரு 'சத்திய சோதனை' இருக்கு. அதனாலெ கவலைப்படாம உங்க எண்ணச்சுவடியிலே எழுதுங்க.

said...

தவறு இருந்ததினைச் சுட்டிக் காட்டியதற்கும், வாழ்த்துக்கும், வரவேற்பினுக்கும் மிக்க நன்றி துளசி கோபால். தவறினைத் திருத்திக்கொண்டேன்

said...

அன்பு மதி
வாழ்த்துக்கள்.
சுயபுராணம் என்று சொல்லும் அளவிற்கு தம்பட்டம் ஒன்றும் நீங்கள் அடிக்கவில்லை. உங்களின் தமிழார்வம் வாழ்த்துக்குரியது. உங்களது ஆக்கங்களை நல்ல முறையில் எழுதி வெற்றிப்பெற்ற எழுத்தாளனாக உருவாகவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz

said...

வாழ்த்துக்கு நன்றி ராசா,
(தம்பட்டம் அடிக்காமல் இருக்க கஷ்ட்டப்பட்டு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.)

Related Posts with Thumbnails