28.நைஜீரியா ஹைஜாக்






20,ஞாயிறு, மே 2007
வைகாசி 06

போர்ட் ஹார்கோர்ட் (நைஜீரியா): நைஜீரியாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் மூன்று இந்தியர்களை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

இது குறித்து நைஜீரிய ராணுவத்தினர் கூறியதாவது:
நைஜீரியாவில் இந்தோனேசியாவைச் சேர்ந்த இன்ட்ரோமா என்ற ரசாயன பெட்ரோல் தொழிற்சாலை உள்ளது. இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்புக்கு, பயங்கரவாதிகள் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்தனர்.

குடியிருப்பு வளாக முன்பக்க கதவை கண்ணி வெடி மூலம் தகர்த்த பயங்கரவாதிகள், ஊழியர்கள் குடியிருந்த வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு, இந்தியாவைச் சேர்ந்த 10 ஊழியர்களை அதிரடியாகக் கடத்தினர்.

இது குறித்து தகவலறிந்த ராணுவத்தினர், உடனடியாக அப்பகுதிக்கு வந்தனர். பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர், கடத்தப்பட்டவர்களில் ஏழு பேரை காப்பாற்றினர். மற்ற மூன்று பேரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர்.

துப்பாக்கிச் சண்டை நடந்த போது, வாகன ஓட்டுனர் ஒருவர் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடத்தப்பட்ட 3 பேரும் இந்தியர்கள் ஆவர்.இவ்வாறு நைஜீரிய ராணுவத்தினர் கூறினர்.

பெட்ரோல் உற்பத்தியில் உலக நாடுகள் நம்பியிருக்கும் நைஜீரியாவில், ஏராளமான வெளிநாட்டவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை பயங்கரவாதிகளும், கிரிமினல்களும் அடிக்கடி கடத்திச் செல்வது அங்கு வாடிக்கையாகி விட்டது. இந்த ஆண்டு இதுவரை 100கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். பெரும் தொகையை கேட்கும் கடத்தல்காரர்கள், பணம் கிடைத்ததும் பிணைக் கைதிகளை விடுவித்து விடுகின்றனர். தற்போது 12 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர்





Update

போர்ட் ஹார்கோர்ட் (நைஜீரியா): நைஜீரியா எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 3 இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதையடுத்து தீவிரவாதிகளுடன் நைஜீரியா அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடத்தப்பட்டவர்களில் 2 பேர்தான் இந்தியர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

2 கருத்துரைகள்:

said...

என்று தான் இந்த மண் மீதான வெறி தீவரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தீருமோ?

முத்து திரைப்படத்தில் ஒரு பாட்டு உள்ளது. அது என் நினைவுக்கு வருகிறது:

http://deepakvasudevan.blogspot.com/2006/07/trading-peace-for-penny.html

said...

வணக்கம் வாசுதேவன் தீபக். நைஜீரியா தீவிரவாதிகள் மற்றவர்கள் போல மண் ஆசையில ஆட்களை கடத்துவதில்லை. எல்லாம் பணத்திற்காகத்தான்.

நேற்று(1st july) கூட பத்து இந்தியர்களை கடத்தியிருக்கிறார்கள்.

Related Posts with Thumbnails