60.சிரித்து வாழ வேண்டும்,
2011 க்கு விடை கொடுத்து விட்டு 2012ல் காலடி எடுத்து வைக்கிறோம். பழமையை திரும்பிப் பார்த்தால், மகிழ்ச்சி, சோகம், வெற்றி, தோல்வி, வரவு, செலவு என்று பல கலந்த கலவையை சந்தித்து இருப்பது தெரிய வரும்.
அவை கொடுத்த பாடத்தைக் கொண்டு எதிர் வரும் இந்த ஆண்டை மேலும் சிறப்பான பலன்களைப் பெற முயற்சிப்போம்.
வாய் விட்டு சிரித்து இப்புத்தாண்டை ஆரம்பிபோமே.
இணயத்தில் நான் ரசித்த சில "கணவன் மனைவி" ஜோக்குகளை இங்கே தொகுத்துள்ளேன்.
மணமானவர்கள் என்றால் ஏதேனும் ஒரு ஜோக்குக்காவது சிரித்து இருக்க வேண்டும்.
4.மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…?
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??
6. சினிமா தியேட்டரில் மனைவி : ஏங்க, பின்னாடி ஒருத்தான் காலை விட்டு சுரண்டிக்கிட்டே இருக்கான்.
கணவன் : பின்னாடி திருப்பி உன்னோட மூஞ்சை காட்டு...! சனியன் சாவட்டும்.
7. "கல்யாணத்துக்குப் பிறகு என்னோட தோஷம் விலகிப்போயிடும்னு ஜோசியர் சொன்னது பலிச்சிடுச்சி."
9. கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்ககூடாது…